மோடியை திடீரென புகழ்ந்த கமல்ஹாசன்.. மக்களின் நம்பிக்கையை பெற்ற பிரதமருக்கு வாழ்த்தாம்.. பின்னணி

  • டெல்லி: ''பொதுவாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன. பொதுவாழ்வில் 25 ஆண்டுகள் என்பதை தாண்டி எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றதற்கான சான்றாக இது உள்ளது'' என்று புகழ்ந்து பேசியுள்ளார். இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    தமிழகத்தில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் உள்ளது. இந்த கட்சியின் நிறுவன தலைவரான கமல்ஹாசன் கடந்த ஆண்டு திமுக தயவில் ராஜ்யசபா எம்பியானார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக கூட்டணியில் சீட் வழங்காமல் இருந்தாலும் கூட கமல்ஹாசன் தொடர்ந்து அந்த கூட்டணியிலேயே உள்ளார்.

    Advertisement

    இந்நிலையில் தான் இன்று திடீரென்று பிரதமர் மோடியை, கமல்ஹாசன் எம்பி புகழ்ந்துள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

    ''பொதுவாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன. பொதுவாழ்வில் 25 ஆண்டுகள் என்பதை தாண்டி எல்லாவற்றுக்கும் மேலானது என்னவென்றால் மக்களின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்றதற்கான சான்று தான். பொதுவாழ்வில் எனது 70 ஆண்டுகால பயணமும் மக்களின் நம்பிக்கையாலும், அன்பாலுமே தொடர்ந்து நிலைத்திருக்கிறது.

    கடந்த ஆண்டு எம்பியாக பதவியேற்ற பிறகு அவரை சந்தித்தேன். முதல்முறை எம்பியான எனக்கு அவர் தாராளமாக நேரம் ஒதுக்கி தந்தார். எங்களின் அரசியல் சார்புகள் எதுவாக இருந்தாலும் கூட இந்தியா மீதான நம்பிக்கை, கனவு, வலிமையான தேசத்தை உருவாக்கி வருங்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் இருவருக்கும் உள்ள கூட்டுப்பொறுப்பு பற்றி பேசினோம்'' என்று கூறியுள்ளார்.

    Advertisement

    கமல்ஹாசனின் இந்த திடீர் வாழ்த்துக்கு பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அது என்னவென்றால் பிரதமர் மோடி தனது இன்றுடன் பொதுவாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். நரேந்திர மோடி கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் முறையாக முதல்வரானார். அதன்பிறகு 2014 மே மாதம் வரை தொடர்ந்து குஜராத் முதல்வராக செயல்பட்டு வந்தார்.

    பின்னர் அவர் 2014 மே மாதத்திலேயே நாடாளுமன்ற தேர்தலில் வென்று பிரதமரானவர் இன்று வரை தொடர்ந்து அந்த பதவியில் வகித்து வருகிறார். 2001 அக்டோபர் 7 ம் தேதி முதல் இன்று வரை குஜராத் முதல்வராக 3 முறை, இந்திய பிரதமராக 3வது முறை என்று தொடர்ந்து பதவி வகித்து 25 ஆண்டு கால பொதுவாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். இதனால் தான் பிரதமர் மோடிக்கு, கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    English Summary

    Kamal Haasan says that, ‘‘My warm wishes to Hon. Prime Minister Shri Narendra Modi ji on completing 25 years in public office. 25 years in public office is, above all, a testament to the trust and love of the people. My own journey of 70 years in public life has been sustained by the trust and love of the people''.