சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம

  • சென்னை: முதல்வர் விஜய் தனது ஒரு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதால், திருச்சி கிழக்கு தொகுதி காலியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பொது வேட்பாளராக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை முன்னிறுத்த வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Advertisement

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த முதல்வர் ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

    Advertisement

    இதனால் அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆளும் கட்சியான தவெக சார்பில், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கரிகாலன் உள்ளிட்டோர் வேட்பாளருக்கான ரேசில் முன்னணியில் உள்ளனர்.

    திருச்சி கிழக்கு

    அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளூம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக சார்பில், இனிகோ இருதயராஜ், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில், பொது வேட்பாளராக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை முன்னிறுத்த வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Advertisement

    இடைத்தேர்தல்

    இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பேசி வரும் அவர்கள்," தற்பொழுதைய அரசியல் சூழலில் திராவிட முன்னேற்ற கழகம் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக உதயநிதி அவர்கள் சட்டமன்றத்தில் கர்ஜித்து வருகிறார். ஆனாலும் தமிழக சட்டமன்றத்தில் ஒரு அனுபவம் நிறைந்த ஒரு ஆளுமை தேவை.

    கமல்ஹாசன்

    அந்த ஆளுமைமிக்கவர்கள் திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு அந்த இடம் சிறப்பாக பொருந்தும். ஆனால் தற்பொழுதைய அரசியல் சூழலில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவை மட்டும் பிளவுபடுத்தி அரசியல் குளிர்காயவில்லை. மாறாக திமுக கூட்டணியையும் அமைச்சரவையில் பங்கு என ஆசைவார்த்தை காட்டி தன் பக்கம் இழுத்து வருகிறது.

    Advertisement

    திமுக கூட்டணி

    இதனால் திராவிட முன்னேற்ற கழக இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலரின் ஆதங்க பேச்சினால் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தொண்டர்கள் சூடாகி கூட்டணிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது.
    இதனை தமிழகத்தில் இருகட்சிகளின் தலைமை சரியாக கையாள வேண்டும். அதற்கு எதிர்வரும் திருச்சி கிழக்கு இடைதேர்தலில் பொது வேட்பாளராக மக்கள் நீதி மய்ய தலைவர் திரு.கமல்ஹாசனை நிறுத்துவது மிக சரியானதாக அமையும்.

    திருச்சி கிழக்கு தொகுதி

    ஏனெனில் திமுக கூட்டணியில் தற்பொழுது சலசலப்பை ஏற்படுத்தியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் மற்றும் நாம்தமிழர் கட்சி தலைவர் அண்ணன் சீமானோடு திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு நல்ல தோழமையுள்ளது. மேலும் பாமக பொதுவாகவே இடைத்தேர்தலில் பங்கெடுப்பதில்லை என்ற கொள்கை உறுதியுடன் உள்ளனர். மேலும் கமல்ஹாசன் அவர்களுக்கு திருச்சியில் ரசிகர் பட்டாளம் அதிகம் என்பதோடு, கடந்த 2019 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை தன்னகத்தே கொண்டுள்ளது.

    Advertisement

    அதிமுக தலைமை

    மேலும் கமல்ஹாசன் போட்டியிட்டால் தமிழகமும் முழுவதுமுள்ள அவரது ரசிகர்கள் களப்பணி செய்ய காத்திருக்கிறார்கள். மேலும் மக்கள் நீதி மய்ய தலைவரை முன்னிறுத்தி ஒரு பொது எதிரியை வீழித்த அதிமுக தலைமையும் தயாராக தான் இருக்கும். இந்த முன்மொழிவை மக்கள் நீதி மய்யத் தலைவரும் உள்ளன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும்" என கூறி வருகின்றனர்.

    English Summary

    MNM supporters urge Kamal Haasan to contest the Trichy East by-election, calling him a consensus candidate against TVK.