வந்துட்டேன்னு சொல்லு! 23 வருடத்துக்கு பின் வந்த சண்டியர்.. கிருஷ்ணசாமி - கமல் இடையே என்ன பிரச்சினை?

  • சென்னை: அரசியல் கை கொடுக்காத நிலையில் சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் கமலஹாசன். இந்த நிலையில் அவர் நடிக்கும் 237வது படத்துக்கு 'சண்டியர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்கு முன் .விருமாண்டி. படத்துக்கு வைக்கப்பட்ட தலைப்பு தான் சண்டியர். அப்போதைக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கொடுத்த நெருக்கடியால் அந்த தலைப்பு வைக்கப்படவில்லை. சண்டியர் என்றால் என்ன கிருஷ்ணசாமி எதற்காக கொந்தளித்தார்? அதற்கு கமலஹாசனின் எதிர்வினை என்ன என்பது குறித்து பார்க்கலாம்..

    Advertisement

    தமிழ் திரையுலகின் தற்கால கலை பொக்கிஷம் கமலஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அவரது கலைப்பயணம் இன்று வரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடன உதவி இயக்குனர், நடன இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா தொழில்நுட்பக் கலைஞர் என கமலஹாசனின் பரிணாமங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்..

    Advertisement

    அவரது ஒவ்வொரு படமும் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள். வித்தியாசமாக அதே நேரத்தில் தொழில்நுட்ப தரத்துடன் திரைப்படங்களை வழங்குவதில் வல்லவர் கமலஹாசன். மக்கள் நீதி மய்யம் கை கொடுக்காத நிலையில் விக்ரம் மூலம் தமிழ் சினிமா மீண்டும் அவரை வாரி அணைத்துக் கொண்டது.

    கமல்ஹாசன்

    தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து பல படங்கள் அவருக்கு வரிசை கட்டி நிற்கின்றன குறிப்பாக ரஜினியும் அவரும் இணைந்து நடக்கும் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இதற்கிடையே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார் கமலஹாசன். அவர் நடிக்கும் 237 வது படத்துக்கு .சண்டியர். என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement
    'சண்டியர்'.. 23 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சர்ச்சை டைட்டிலை கையிலெடுத்த கமல்ஹாசன்! பின்னணி

    சண்டியர்

    நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தை சித்தா, வீரதீர சூரா ஆகிய படங்களை இயக்கிய எஸ்யு அருண்குமார் இயக்குகிறார். ஜேக் பிஜோய் இசை அமைக்க, ஆடு ஜீவிதம் படத்தின் ஒளிப்பதிவாளர் சுனில் கேஎஸ் ஒளிப்பதிவை கவனித்துக் கொள்கிறார். சமீர் எடிட்டிங் துறையை கவனித்துக் கொள்கிறார். இந்த படத்துக்கான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் கடந்த காலங்களில் நடந்த சில சம்பவங்களையும் அசைபோட்டு வருகின்றனர்.

    Advertisement

    விருமாண்டி

    23 ஆண்டுகளுக்கு பின் சண்டியர் என்ற பெயரை கமல்ஹாசன் பயன்படுத்துகிறார். கடந்த 2003ஆம் ஆண்டு கமலஹாசன் இயக்கிய கிராமத்து பின்னணி கதை கொண்ட விருமாண்டி திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அந்த படத்துக்கு முதலில் சண்டியர் என பெயர் வைத்திருந்தார் கமலஹாசன். ஆனால், அந்த தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    Kamal Haasan: ஸ்டார்லிங் பஞ்சாயத்து.. இந்தியா மீது ஆதங்கத்தை கொட்டிய எலான் மஸ்க்கிற்கு கமல்ஹாசன் பதிலடி

    கிருஷ்ணசாமி

    அப்போதைக்கு தென் தமிழகத்தில் கடுமையான சாதி மோதல்கள் நிலவி வந்த காலம். சண்டியர் என்ற பெயர் சாதி ஆதிக்கத்தையும் வன்முறையையும் பெருமைப்படுத்துவது போல அமையும் என குறிப்பிட்ட ஒரு சாதிக்கு எதிராக குரல் கொடுத்தார் கிருஷ்ணசாமி. இவரிடத்தில் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன. இதை அடுத்து அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த விவகாரத்தில் தலையிட்டு படத்துக்கு சிக்கல் வரும் சூழ்நிலை உருவானது. பேச்சுவார்த்தைக்குப் பின் சண்டியர் படத்துக்கு விருமாண்டி என பெயர் வைக்கப்பட்டது.

    Advertisement

    தலைப்பு சர்ச்சை

    அப்போது வீடியோ ஒன்றையும் வெளியிட்டார் கமலஹாசன். சண்டியர் என பெயர் வைத்தால் கிருஷ்ணசாமி கோபித்துக் கொள்கிறார். முரட்டுக்காளை என பெயர் வைத்தால் ரஜினிகாந்த் கோபித்துக் கொள்வார். அவ்வையார் என பெயர் வைத்தால் இந்த படத்துக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில் தற்போதும் அது ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் அப்போது எதிர்ப்புக்கு பணிந்த கமலஹாசன் மீண்டும் அதே தலைப்பை வைத்திருக்கும் நிலையில் என்ன செய்யப் போகிறார் கிருஷ்ணசாமி? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English Summary

    Kamal Haasan’s upcoming 237th film revives the Sandiyar title, recalling the 2003 controversy involving Puthiya Tamilagam leader Krishnasamy.