'Vox Populi' தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. வித்தியாசமான பதிவை எழுதிய கமல்ஹாசன்.. அர்த்தம் என்ன?

  • சென்னை: கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்தால் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் Vox Populi என்று 2 வார்த்தையில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். இதனால் அந்த 2 வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடி ஒரு தரப்பு விவாதம் நடத்தி வருகிறது.

    Advertisement

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி நாடு முழுவதும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்தியது. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பாட்னா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். GEN Z இளைஞர்களின் புதிய போராட்ட வடிவமும் பல்வேறு தரப்பினரையும் ஈர்த்தது.

    Advertisement

    போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சோசியல் மீடியாவில் வித்தியாச வித்தியாசமாக வீடியோக்களை வெளியிட்டனர். இன்ஸ்டாகிராம் முழுக்க GEN Z இளைஞர்கள் போராட்ட வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் சமூக ஆர்வலர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்தனர்.

    இந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு, போராடிய மாணவர்கள் மீது வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    12 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மாணவர்களின் போராட்டம் காரணமாக மத்திய அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்வது இதுவே முதல்முறையாகும். இதனால் மாணவர்களின் போராட்டத்திற்கு பாஜக அடி பணிந்துவிட்டதாக சாமானிய மக்களும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றதற்கு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

    அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன், Vox Populi என்று 2 வார்த்தைகளில் பதிவிட்டுள்ளார். இதற்கு அர்த்தம் புரியாமல் பலரும் குழம்பி இருக்கின்றனர். Vox Populi என்ற வார்த்தை லத்தீன் வார்த்தைகளாகும். அதன்படி, மக்களின் குரலுக்கு கிடைத்த வெற்றி என்று பொருள். இதனால் மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Kamal Haasan: 'Vox Populi' Kamal Haasan Reacts to Dharmendra Pradhan’s Resignation, Calls It Victory for Youth