Kanimozhi: துப்பில்லாத ஆட்சி.. திடீரென கையில் பெப்பர் ஸ்பிரே எடுத்த கனிமொழி.. தவெக அரசு மீது கடும் அட்டாக்

  • சென்னை: முதல்வர் விஜய் அவர்களே, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்ணுக்கும் தயவு செய்து பெப்பர் ஸ்பிரேவை கொடுங்க.. எங்கள் சகோதரிகள் எல்லாருக்கும் ரேஷன் கடை வாயிலாகவாது பெப்பர் ஸ்பிரே கொடுங்க.. ஏனென்றால் இந்த துப்பில்லாத, வக்கில்லாத ஆட்சியில் அதுவாது எங்களை காப்பாற்றும் என்று கனிமொழி எம்பி விமர்சித்து பேசியுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து தமிழகம் முழுக்க மாவட்ட தலைநகரங்களில் திமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சென்னையில் நடந்த போராட்டத்தில் திமுக எம்பி கனிமொழி விஜய்யை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

    Advertisement


    பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை..

    ஜெயிலில் கைதி தப்பி ஓடியது பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. இன்னைக்கு சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியது பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவங்க ஆட்சியில் இதுவரைக்கு 50 கைதிகள் தப்பி சென்று இருக்கிறார்கள். இப்போது ஜெயில் எப்படி இருக்கிறது என்றால், நீ எப்போ வேண்டும் என்றாலும் உள்ளே போகலாம்.. எப்போது வேண்டும் என்றாலும் வெளியே வரலாம்.

    அப்புறம் என்ன செய்வார்கள் என்றால் தேடிப்பிடித்து ஒரு பாதி பேரை புடிப்பாங்க.. மீதி பேரை அப்படியே தப்பி விட வைத்துவிடுவார்கள். இது தான் சட்டம் ஒழுங்கு. தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய நிலை. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வீட்டு முன்பு இருக்கும் பெண்ணுக்கு கூட பாதுகாப்பு இல்லை. வெட்டி கொன்று விடுகிறார்கள். வீட்டுக்கு வெளியில் தான் என்றால் வீட்டு உள்ளே இருப்பவர்களையும் வெட்டு கொல்கிறார்கள்.

    Advertisement

    வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகிறாங்க

    இத்தனை ஆண்டுகளாக பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும்.. படிக்க வேண்டும்.. வேலைக்கு போக வேண்டும்.. ஜாதிக்க வேண்டும் என பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம். நீ நினைத்த போது வெளியில் வா என்பதற்கு தான் விடியல் பயணத்தை மு.க ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் இன்றைக்கு பஸ்களில் இலவசமாக டிக்கெட் கொடுத்த போது கூட வீட்டை விட்டு பெண்கள் வெளியே வர பயப்படுகிறார்கள்.

    ஒரு அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு 2 ஆம்புள புள்ளை தான்மா.. பெண் பிள்ளைகள் இல்லை. ஆனால் அவங்கள வெளியே அனுப்புவதற்கு கூட பயமாக இருக்கிறது. முன்பெல்லாம் பசங்க வெளியில் சென்றால் எங்க இருக்க என்ன செய்கிறாய் என கேட்க மாட்டேன். ஆனால் இன்று அரைமணி நேரத்திற்கு ஒரு முறை போன் செய்து பேச வேண்டி உள்ளது..என்கிறார். அந்த அளவுக்கு மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள்.

    Advertisement

    பெப்பர் ஸ்பிரே கொடுங்க விஜய்..

    பெண்களுக்கு அது கொடுப்பேன், இது கொடுப்பேன் என சொல்கிறார் விஜய்.. நான் ஒன்றே ஒன்று தயவு செய்து கொடுங்க என்று சொல்லிக்கொள்கிறேன். பெண்களுக்கு பெப்பர் ஸ்பீரே கொடுங்க விஜய்.. தமிழ்நாட்டில் இருக்ககூடிய ஒவ்வொரு பெண்ணுக்கும் தயவு செய்து இந்த பெப்பர் ஸ்பிரேவை கொடுங்க..

    உங்க போலீஸ், பாதுகாப்பு படையினர் யாரும் பெண்களை காப்பாத்த போறதில்லை. எனவே எங்கள் சகோதரிகள் எல்லாருக்கும் ரேஷன் கடை வாயிலாகவாது பெப்பர் ஸ்பிரே கொடுங்க.. ஏனென்றால் இந்த துப்பில்லாத, வக்கில்லாத ஆட்சியில் அதுவாது எங்களை காப்பாற்றட்டும்.. என்று கூறினார்.

    English Summary

    Kanimozhi criticizes TVK: "Chief Minister Vijay, please provide pepper spray to every woman in Tamil Nadu. Ensure that all our sisters receive pepper spray—perhaps even through the ration shops—because, under this incompetent and inept administration, at least that might keep us safe," stated MP Kanimozhi in her criticism.