தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா? ஜோதிடர் ஆட்சியா? விஜய் அரசை விளாசிய கனிமொழி எம்பி

  • சென்னை: புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று ஆர்டிஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது. இப்படி இருக்கும் போது அந்த இடத்தைத் தேர்வு செய்தது யார்?.. முதல்வர் விஜய்யா, இல்லை ஜோதிடரா?.. தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தற்போது தலைமை செயலகம் இயங்கி வருகிறது. போதிய இடவசதி இல்லாததால், புதிய தலைமை செயலகம் கட்ட தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய நிலையத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

    Advertisement

    புதிய தலைமை செயலகம்

    ஆனால், இதற்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து, சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அண்ணாமலை பாஜகவை கண்டிச்சாரா? ஆச்சரியமா இருக்கே! தவெகவினரின் லட்சணம் இது தான்! கனிமொழி காட்டம்!

    இதற்கிடையே, பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டுவதற்கு பட்டினப்பாக்கம் பகுதி எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது என்பதற்கான எந்தவிதத் தகவலும் தங்களிடம் இல்லை என்று தமிழ்நாடு அரசின் பொதுத்துறை (கட்டடங்கள்) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கூறியிருப்பது கடும் விவாதப்பொருளாகியுள்ளது.

    Advertisement

    கனிமொழி எம்பி கடும் விமர்சனம்

    ஆர்டிஐ கேள்விகு தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள திமுக எம்பி கனிமொழி, தமிழ்நாட்டை ஆள்வது முதல்வர் விஜய்யா அல்லது ஜோசியரா எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளாது. அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது. அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் விஜய் அவர்களா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?' என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    ஆர்டிஐ கேள்வி

    1. புதிய தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கம் நிலத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பாக ஏதேனும் முறையான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டதா?
    2. இந்த இடத்தை இறுதி செய்ய என்னென்ன விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன?

    பெண்களுக்கு அண்ணனாக இருப்பேனு சொன்னாரு.. 9 நாட்களாகியும் சிறுமியை கண்டு பிடிக்கலயே.. கனிமொழி ஆவேசம்!

    3. பட்டினப்பாக்கத்தைத் தவிர வேறு எந்தெந்த மாற்று இடங்கள் அரசின் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்பட்டன?

    இந்த மனுவை ஆய்வு செய்த பொதுத்துறை (கட்டடங்கள்), மனுதாரருக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. அதில், "புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக பட்டினப்பாக்கம் பகுதி எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது என்பதற்கான எந்தத் தகவலும் பொதுத் துறையிடம் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Kanimozhi: In response to an RTI query, the government has stated that it possesses no records regarding the study or rationale behind selecting Pattinapakkam as the site for the new Secretariat. Given this, one must ask: who chose this location—Chief Minister Vijay, or an astrologer? Is Tamil Nadu being governed by the people, or by an astrologer? questioned MP Kanimozhi.