சென்னை: சென்னை திமுக கிழக்கு மாவட்ட மகளிரணி சார்பில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. திமுக முன்னாள் அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான சேகர்பாபு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்கவில்லை.
சென்னை திமுக கிழக்கு மாவட்ட மகளிரணி சார்பில் தீபாவளி திருநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, நேற்று திமுகவின் முரசொலி நாளிதழில் விளம்பரம் ஒன்று வெளியாகியிருந்தது. அதில், திமுகவின் முரசொலி நாளிதழில் நேற்று நவம்பர் 3 ஆம் தேதி, திமுக சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் "மகளிர் அணி - மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுக்கு தீப ஒளி திருநாளை முன்னிட்டு சிறப்பு சேர்த்தல்" நிகழ்ச்சி நடைபெறும் என்றும், சிறப்பு சேர்ப்பவர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி. என்றும் விளம்பரம் வெளியாகியிருந்தது.
இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதுதொடர்பாக திராவிடர் தளம் அமைப்பினரும் கண்டம் தெரிவித்திருந்தனர். அதில், அமைப்பு சார்பாகவே தி.மு.க. தீபாவளியைக் கொண்டாடுவது தவறு! அறிஞர் அண்ணா, கலைஞர் காலங்களில் அமைப்பு சார்பாக தி.மு.க. தீபாவளியைக் கொண்டாடியது உண்டா? தீபாவளிகளை மறுத்த அவர்களெல்லாம் வெற்றிகளைப் பெறவில்லையா? தி.மு.க.விற்கும் - த.வெ.க. போன்ற கட்சிகளுக்கும் கொள்கை ரீதியாக பெரும் வேறுபாடு உள்ளது என நம்புபவர்களின் நம்பிக்கையை உடைப்பது நல்லதல்ல. கடந்த 2025 ஆம் ஆண்டு உதயநிதி, இந்த ஆண்டு கனிமொழி தீபாவளிக்கு தி.மு.க.சார்பாகவே விழா நடத்தி, பரிசுகளை வழங்குவதைக் கண்டிக்கிறோம். தி.மு.க. நாத்திகர்களின் கட்சி அல்ல; அதே வேளையில் இந்து மதவாதிகளின் கட்சியும் அல்ல என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சென்னை வேப்பேரி, அனிதா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பிகேஎன் மஹாலில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் கனிமொழி கலந்துகொள்ளவில்லை. இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், அந்தக் கட்சியின் எம்எல்ஏ சேகர்பாபு பேசுகையில், திமுக கவுன்சிலர் கனிமொழியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. அவருக்கு மட்டுமல்ல, இங்குள்ள மகளிரணிக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. கனிமொழிக்கு விபத்தில் கால் அடிபட்டு, இப்போதுதான் சரியாகியுள்ளது. அவரை பார்த்துக்கொள்ள மகளிரணியினர் சிறை செல்ல தயாராக இருந்தனர். தோல்விகள் பல கண்டாலும் இந்த இயக்கத் துவண்டுவிடுவதில்லை. எத்தனையோ சுமைகள் நம் மீது சுமத்தப்பட்டாலும் துணிந்து நிமிர்ந்து செல்கிறோம். ஒரு அடி நம்மை நோக்கி வரும் பிரச்சனையை, பத்து அடி துள்ளி குதித்து துரத்தும் ஆற்றல் மகளிரணிக்கு உள்ளது. திமுகவுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதில் உடன்பாடு இல்லை. இந்த நிகழ்ச்சி ஏன் நடத்தப்படுகிறது என்கிற விமர்சனங்கள் எழுவது இயல்பு. தமிழகத்தில் இன்றைக்கு நரகாசுரன் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தேவர்களை கொடுமைப்படுத்தி கொண்டிருந்தவன் நரகாசுரன். அதனால் தான் அவனுக்கு அந்த பெயர் வந்தது. இன்றைக்கு தேவர்களாக இருப்பவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அவன் ஒரு வரத்தை பெறுகிறான். அவனின் தாயார் துணையோடு போர்புரிய வேண்டும். அவரால் தான் தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று வரத்தை பெற்றான். உடனடியாக தேவர்கள் அனைவரும் அகிலத்தை ஆளும் கிருஷ்ண பெருமானிடம் முறையிடுகிறார்கள். இவரால் ஏற்படும் தொல்லைகளை தாங்க முடியவில்லை என்று முறையிட்டார்கள். அவரும், அவர் வேண்டி வரம் கேட்டவர்களும் போரிட்டு நரகாசுரனை வதம் செய்தார்கள். வதம் செய்யும்போது நரகாசுரன் ஒரு வேண்டுகோளை கிருஷ்ண பெருமானிடம் வைத்தார். என்னுடைய இறப்பு நாளை தீபாவளி பண்டிகையாக அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கூறினர். தமிழகத்தினுடைய நரகாசுரனை ஒழிக்கும் நாள் தான் நமக்கு உண்மையான தீபாவளி பண்டிகை" என்றார்.புறக்கணித்த கனிமொழி
நரகாசுரன் ஆட்சி
எப்போது தீபாவளி