சென்னை: பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்னும் பெயரில் அராஜகமான முறையில், அவரது தொலைப்பேசியைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் அடைத்த தவெக அரசு காவல் துறையின் செயல் கண்டிக்கத்தக்கது என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். மேலும், ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கும் கீழ்மையான அரசியலை, தவெக அரசு தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் செய்யத் தொடங்கிவிட்டது என்றும் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக கனிமொழி எம்பி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: பத்திரிகையாளர் விஜயன் அவர்களை விசாரணை என்னும் பெயரில் அராஜகமான முறையில், அவரது தொலைப்பேசியைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கும் கீழ்மையான அரசியலை, தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் செய்யத் தொடங்கிவிட்டது தவெக அரசு. உடனடியாக பத்திரிகையாளர் விஜயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.