கனிமொழி புரிஞ்சுக்காம பேசுறார்.. பாஜக வலையில திமுக விழக்கூடாது! கார்த்தி சிதம்பரம் அட்வைஸ்!

  • சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து திமுக எம்பி கனிமொழி, புரிதலின்றி பேசுகிறார் என்றும்.. இது பாஜக விரிக்கும் வலை, அதில் திமுக விழுந்துவிடக்கூடாது என்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார்.

    Advertisement

    தொகுதி மறுவரையறையை தவெக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இது குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தை தவெக ஏற்பாடு செய்திருந்தது. அதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை. இப்படி இருக்கையில் கார்த்தி சிதம்பரம் பேசியது கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    புரிதல் இல்லாம பேசுறார் கனிமொழி

    கார்த்தி சிதம்பரம் பேசியதாவது, "கன்மொழி புரிதல் இல்லாமா பேசுறார். 543 தொகுதிகள் லோக்சபாவில் இருக்கின்றன. இதை இந்திரா காந்தி 1971-1976ல் 25 வருடங்களில் மாற்ற வேண்டும் நிறுத்தி வைத்தார். 2005ல் வாஜ்பாயும் 543ஐ மாற்ற மாட்டோம் என்றார். இப்போது இதை மறுசீரமைப்பு செய்தால்.. தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை 39லிருந்து 47 என கூடும். ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 80லிருந்து 115 வரை கூடும். கேரளாவுக்கு குறையும்.

    தென் மாநிலங்களுக்கு பாதிப்பு

    2026-2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், தென் இந்திய மாநிலங்களுக்கு தொகுதிகள் குறையும். வட இந்தியாவில் எண்ணிக்கை கூடும். இதை சமாளிக்க.. மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல்.. அனைத்து மாநிலங்களுக்கும் 50% எண்ணிக்கையை கூட்டுகிறோம் என்று பாஜக சொல்கிறது. இப்படி செய்தால் தமிழகம், பாண்டிச்சேரிக்கு தொகுதிகளின் எண்ணிக்கை 40லிருந்து 60ஆக உயரும். ஆனால் உத்தரப் பிரதேசத்திற்கு 80லிருந்து 120 ஆக உயரும்.

    Advertisement

    இடைவெளி அதிகரிக்கும்

    நமக்கும் உத்தரப் பிரதேசத்திற்கும் இப்போது இருக்கும் எம்பி தொகுதிகளின் வித்தியாசம் 40. ஆனால், 50% உயர்வு என்று வந்தால் இந்த வித்தியாசம் 60 ஆக உயரும். அப்படியெனில், வட இந்தியாவில் 5 மாநிலங்களில் மட்டும் ஜெயித்தால் நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி வந்துவிடும். இதனால் வட இந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் இடைவெளி பெரியதாகிக்கொண்டே போகும்.

    ஆக தொகுதி மறுவரையறையை எப்படி கொண்டு வந்தாலும் அது தமிழ்நாட்டிற்கு பாதிப்பைதான் ஏற்படுத்தும். எனவே, இந்திரா காந்தி, வாஜ்பாய் செய்ததை போல.. இப்போதும் மத்திய அரசு இதை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார். கனமொழி குறித்து கார்த்தி சிதம்பரம் இப்படி பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    கனிமொழி பேசியது என்ன?

    "திமுக தொகுதி மறுவரையறையை முற்றிலுமாக எதிர்க்கவில்லை. ஆனால், அது நியாயமான முறையில் நடக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, சமூக-பொருளாதார ரீதியில் முன்னேறிய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் இந்த மறுவரையறை அமைந்துவிடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது" என்று கனிமொழி பேசியிருந்தார்.

    காங்கிரஸ் அட்வைஸ்

    முன்னதாக திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, தொகுதி மறுவரையை முழுமையாக எதிர்த்தது என்றும், இப்போது நியாயமான முறையில் நடக்க வேண்டும் என்று கேட்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இப்படி இருக்கையில், கனிமொழி புரிதல் இல்லாமல் பேசுகிறார் என்று, கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    English Summary

    Kanimozhi: Congress MP Karti Chidambaram has stated that DMK MP Kanimozhi is speaking without a proper understanding of constituency delimitation, adding that this is a trap laid by the BJP and the DMK should not fall for it.