துரைமுருகன் வீட்டில் பெண் எடுத்ததால் திருடனா? திமுக பினாமியா நான்? தயாரிப்பாளர் கண்ணன் ரவி குமுறல்

  • சென்னை: தனது மகன் திருமணத்தை சுற்றி எழுந்த விமர்சனங்கள் குறித்து சினிமா தயாரிப்பாளர் கண்ணன் ரவி அதிரடியாகப் பதிலளித்துள்ளார். ₹65,000 கோடி பணம் தன்னிடம் இருப்பதாக சிலர் கிளப்பிவிட்டு இருப்பதாகவும் இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பவர்களுக்கு தலா ₹5 கோடி தருவதாக பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

    Advertisement

    சமீபத்தில் தான் துரைமுருகன் பேத்திக்கும்- தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகனுக்கும் திருமணம் நடந்தது. வைதீக முறைப்படி சடங்குகள் உடன் இந்த திருமணம் நடத்தப்பட்ட நிலையில், அப்போதே திராவிட இயக்கத்தினர் மத்தியில் இது பேசுபொருளானது. பலரும் துரைமுருகனை கடுமையாக விமர்சித்தனர்.

    Advertisement

    இது ஒரு பக்கம் இருக்க தயாரிப்பாளர் கண்ணன் ரவி மீதும் விமர்சனங்கள் எழுந்தன. அதாவது அவர் திமுக பினாமி என்றும் திமுகவின் பணத்தில் தான் இவ்வளவு பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே அது தொடர்பாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

    துரைமுருகன் வீட்டில் பெண் எடுத்தால்

    சென்னையில் நடந்த சினிமா பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கண்ணன் ரவி, "துரைமுருகன் சார் வீட்டில் பெண் எடுத்த ஒரே காரணத்திற்காக ஒருவன் திருடன் ஆகிவிட முடியாது. மணல் பணம் என்று விமர்சிக்கிறார்கள். ஆமாம், இது மணல் பணம்தான். ஆனால், துபாய் பாலைவனத்தில் உழைத்து சம்பாதித்த மணல் பணம். இந்திய பணம் கிடையாது. மேலும், அந்த குடும்பத்திடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணையாக வாங்கியதாக நிரூபித்தால் கூட தன் மீது எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம். மகன் திருமணத்தை எனது சொந்த உழைப்பிலும் பணத்திலும் முன்னின்று நடத்தினேன்.

    Advertisement

    என மகன் திருமணத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடியதற்கும் விமர்சனங்கள் எழுந்தன. என் மகன் திருமணத்தில் நான் சந்தோஷமாக நடனமாடாமல், அடுத்தவன் இறப்பிலா போய் ஆடுவேன்? அவன் எனது குழந்தை. அவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும், அவனோடு துணை நிற்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

    சமோசா விற்ற பணம்?

    நான் முதலில் சமோசா விற்று கொண்டிருந்தேன் என்று சிலர் சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்கள் என் பக்கத்தில் அமர்ந்து போண்டா விற்றாரா, அல்லது வடை விற்று கொண்டிருந்தாரா? ஒருவரை பற்றி பேசும் முன் அவரது பூர்வீகம் என்ன என்பதை முழுமையாகத் தெரிந்துகொண்டு வந்து பேச வேண்டும். சும்மா 4 சேர் இருக்கு என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.

    Advertisement

    திமுக பினாமி

    திருமாவளவனை துபாய்க்கு அழைத்துச் சென்று ஏதோ செய்ததாகவும், என்னிடம் திமுகவின் ₹65,000 கோடி பணம் உள்ளதாகவும் சிலர் கிளப்பி விடுகிறார்கள். என் கையில் மட்டும் ₹65,000 கோடி இருந்தால், தினமும் 600 கிராமங்களை தத்தெடுத்து நானே முழு செலவையும் ஏற்றுக்கொள்வேன். முடிந்தால் அந்த பணத்தை நீங்களே பேசி வாங்கிக் கொடுங்கள், அதை உங்களிடமே ஒப்படைக்கிறேன்.

    எந்த கட்சியாக இருந்தாலும் சரி, எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் சரி, கண்ணன் ரவி அனைவருக்கும் கொடுத்துப் பழக்கப்பட்டவனே தவிர யாரிடமும் வாங்கி பழக்கப்பட்டவன் அல்ல. யாரிடமாவது பணம் வாங்கியதாக நிரூபித்தால், முன்பு ₹1 கோடி தருவதாகச் சொன்னேன். இப்போது சொல்கிறேன். அதை நிரூபிக்கும் ஒவ்வொரு நபருக்கும் தலா ₹5 கோடி ஒயிட்டாக தருகிறேன்.

    Advertisement

    அஞ்ச மாட்டேன்

    மகன் திருமணத்தை மகிழ்ச்சியாக நடத்த நினைத்தேன். திருமணம் குறி்தது பிளான் பண்ணும்போதே இந்தியாவில் நடத்த வேண்டாம், வெளிநாட்டில் நடத்துங்கள்; இங்கு பல தொல்லைகள் வரும் என்று பலர் எச்சரித்தார்கள். இப்போது அவர்கள் சொன்னதன் ஏன் என புரிகிறது; அதற்காக நான் பயப்பட போவதில்லை. எனது மகள் திருமணத்தையும் தமிழ்நாட்டில்தான் நடத்துவேன், அது இதைவிட இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்..

    English Summary

    Film producer Kannan Ravi has hit back at criticism surrounding his son’s wedding to former DMK minister Duraimurugan’s granddaughter(மகன் திருமணம் குறித்து தயாரிப்பாளர் கண்ணன் ரவி): Kannan Ravi about his son marriage latest in tamil.