சட்டமன்றத்தில் விஜய் நடத்தியது கட்டா குஸ்தி.. வீ த லீடர் அமைப்பின் கரு. நாகராஜன் கிண்டல்

  • சென்னை: இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா செய்கிறார்கள். இது மக்களுக்கு செய்த துரோகம்.50 ஆண்டுகளுக்கு நடந்த விஷயங்களை பேசி சட்டமன்றத்தில் விஜய் பேசியது, கட்டா குஸ்தி நடத்தியது வேடிக்கையாக உள்ளது என
    -கரு நாகராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் காட்டமாக பேசினார்...

    Advertisement

    சென்னை மாதவரத்தை அடுத்த மாத்தூர் பகுதியில், 'ஏ.கே.ஆர் அறக்கட்டளை'யின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழா மாதவரம் குமரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் 3,000 பேருக்கு அறுசுவை உணவும், ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    Advertisement

    இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வீ த லீடர் அமைப்பின்ன முன்னணி நிர்வாகி கரு. நாகராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: "தொழிலதிபர் ஒருவர், தனது தொழிலில் கிடைக்கும் லாபத்திலிருந்து ஏழை எளிய மக்களுக்கு மாதந்தோறும் மளிகைப் பொருட்களையும் ₹500 நிதியுதவியையும் வழங்கி வருகிறார். இது சாதாரண விஷயமல்ல. அதேபோல, சில பகுதிகளில் தனது சொந்தச் செலவிலேயே சாலை வசதி, குடிநீர் வசதிகளைச் செய்து தருகிறார்.

    இடைத்தேர்தல் தேவையில்லாத ஒன்று

    தற்போது இடைத்தேர்தல் வருவது என்பது தேவையில்லாத ஒன்றுதான். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. வாக்களித்த போது விரலில் வைக்கப்பட்ட மை ஈரம் காய்வதற்குள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட இயக்கத்திலோ இணைவதை இதுவரை தமிழகத்தில் நான் பார்த்ததே இல்லை.

    Advertisement

    அப்படி இணைந்த பிறகு, ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், 'நான் எனது ராஜினாமாவை திரும்பப் பெறுகிறேன்' என்று பேட்டி அளிக்கிறார். இந்தச் சூழலில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் மக்கள் விஜய் (தவெக) வேண்டாம் என்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். ஆனால், இவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இது மக்களுக்காகவா? அல்லது தங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கா? அல்லது பெரிய பதவிகளைப் பெறுவதற்கா? என்று தெரியவில்லை. இதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்பதைத் தொகுதி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    Advertisement

    ஐந்து தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. திமுகவினர் குதிரை பேரம் பேசுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று, தமிழக வெற்றிக் கழகம் மீதும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    சட்டமன்றம் சந்தை மன்றமாக மாறியுள்ளது

    சட்டமன்றத்தில் நடக்கும் விவாதங்கள் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே நடைபெறுகின்றன. 'இது சட்டமன்றமா அல்லது சந்தை மன்றமா?' என்று சகோதரி பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் விமர்சனம் செய்துள்ளனர்.

    சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுவதற்குக் கண்டனம் தெரிவித்த பிரேமலதா, வரும் 8-ஆம் தேதி வரை அவரைப் பேச அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார். மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல், ஒருவர் மீது ஒருவர் குறை கூறிச் சண்டை போடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் 'இது சட்டமன்றமா?' என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    Advertisement

    நேற்று நடைபெற்ற சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது, 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயங்களைப் பேசி, முதலமைச்சர் பதிலளித்ததும், சட்டமன்றத்தில் 'கட்டா குஸ்தி' நடத்தியதும் வேடிக்கையாக உள்ளது" என்று கரு. நாகராஜன் கூறினார்.

    English Summary

    Karu Nagarajan ridicules Vijay's Assembly speech as 'Katta Kusthi,' condemning political resignations and criticizing legislative misconduct.