சென்னை: சன் டிவி குழுமம் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் திருமணம் நடக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது. காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21ல் சென்னையில் நடக்கவுள்ளது.
இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபரான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும், இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் திருமணம் உறுதியாகி இருக்கிறது. காவ்யா மாறன் - அனிருத் திருமணம் நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விழாவில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.
இதன்பின் நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரும் பங்கேற்க உள்ளனர். அந்த வகையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சன் டிவி குழுத் தலைவர் கலாநிதி மாறன் குடும்பத்துடன் திருமண வரவேற்புக்கான அழைப்பிதழை கொடுத்துள்ளார். ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தின் போதே அனிருத் - காவ்யா மாறன் இருவரும் காதலித்து வருவதாக பேச்சுகள் எழுந்தன. இதன்பின் அமெரிக்காவில் காவ்யா மாறன் - அனிருத் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றிய போது, யூடியூப் சேனல் ஒன்றின் விலாக்கில் (Vlog)ல் சிக்கினார்கள். இதன்பின் அனிருத் - காவ்யா மாறன் காதல் விவகாரம் தலைப்பு செய்தியாகியது. இருப்பினும் இருவருமே காதல் தொடர்பாக அமைதி காத்தனர். இதன்பின் கூலி திரைப்பட விழாவில் அனிருத் தான் தெற்காசியாவிலேயே சிறந்த பேச்சிலர் என்றெல்லாம் நடிகர் ரஜினிகாந்த் சான்றிதழ் கொடுத்து கலாநிதி மாறன் முன்னிலையில் பாராட்டினார். இதன் மூலம் இரு வீட்டாருக்கும் இடையில் திருமண பேச்சுவார்த்தை நடந்து முடிந்துவிட்டது என்று சொல்லப்பட்டது. நேற்று ஜெயிலர் 2ஆம் பாகம் ரிலீஸான நிலையில், இருவரும் வெற்றி திரையரங்கில் ஒன்றாக படம் பார்த்தனர். இதன் மூலமாக திருமணம் விரைவில் நடக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் கலாநிதி மாறன் குடும்பத்துடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு காவ்யா மாறன் - அனிருத் திருமண அழைப்பிதழை கொடுத்து உறுதி செய்துள்ளார். தென்னிந்தியாவின் மிக முக்கிய திருமணமாக இது அமைந்துள்ளது.