கீர்த்தனா சொன்ன அந்த வார்த்தை.. மளமளனு இறங்கி வந்த தங்கம் தென்னரசு.. ஒரு நிமிஷம் ஷாக் ஆன சட்டப்பேரவை

  • சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்டாசு ஆலை லைசென்ஸ் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமைச்சர் கீர்த்தனாவுக்கும், தங்கம் தென்னரசுவுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்ற கீர்த்தனா வார்த்தையை விடவும், "நீங்க லஞ்சம் வாங்குனீங்கனு எங்ககிட்ட சொல்றாங்களே"என்று தவெக அரசை தங்கம் தென்னரசு பதிலுக்கு தாக்கி பேசியதால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    சிவகாசி சுற்றுவட்டாரங்களில் பட்டாசு ஆலைகளில் திடீர் சோதனை நடத்தும் அதிகாரிகளால் வர்த்தகம் பாதிப்பு என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவயில் குற்றம் சாட்டினார்.

    Advertisement

    இதற்கு அமைச்சர் கீர்த்தனா, அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க நடத்தப்பட்ட ஆய்வுகளால் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 177 ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.. பட்டாசு லைசென்ஸ் கொடுப்பதில்கூட அவ்வளவு ஊழல் இருந்தது. உண்மையாகவே ஊழல் இருந்தது.. ஒரு லைசென்ஸ் வாங்கவேண்டுமானாலும் 1 லட்சம், 3 லட்சம் என்று வாங்கப்பட்டுள்ளது" என்றார் கீர்த்தனா.

    பட்டாசு ஆலைகள்

    கீர்த்தனா இப்படி சொன்னதுமே திமுக உறுப்பினர்கள் கொந்தளித்து விட்டார்கள்.. ஒவ்வொருவராக எழுந்து பதில் சொல்ல முனைந்தனர்.. தங்கம் தென்னரசு அவரது இருக்கையை விட்டே கீழே இறங்கி வந்தார்.

    உடனே செங்கோட்டையன் எழுந்து, "பேரவை தலைவர்கள் அவர்களே. அமைச்சர் கீர்த்தனா யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லையே?அதற்குள் ஏன் இப்படி எழுந்து நிற்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    கீர்த்தனா பதில்

    பிறகு கீர்த்தனா, "இப்போதுகூட நான் யார் பெயரையும் சொல்லவில்லை. இந்த குற்றச்சாட்டையும் நான் சொல்லவில்லை.. ஆனால், அசோசியேஷனில் இருந்து அதற்கான ஆதாரத்தை எனக்கு இமெயிலில் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. அந்த ஆதாரத்தை வேண்டுமானால் நான் சமர்ப்பிக்கிறேன் என்றார்.

    இதற்கு தங்கம் தென்னரசு பதிலளிக்கும்போது, "முந்தைய காலகட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த பட்டாசு ஆலைகளுக்கான உரிமங்கள் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை இப்போதைய அரசு செய்து கொடுத்து வருகிறது.. ஆனாலும், அனைத்து பணிகளும் முறையாக முடிக்கப்பட்ட பிறகும் உறுப்பினர் இதுபோன்று தொடர்ந்து குற்றம் சாட்டுவது ஏன்?

    எங்களிடமும் சிலர் வந்து, லைசென்ஸ்கள், அனுமதிகள் தொடர்பாக சில அசோசியேஷன்களை சேர்ந்தவர்கள் ஊழல் எனுறு முறையிடுகிறார்கள்.. அதற்காக நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று பதில் கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    சபாநாயகர் சமாதானம்

    உடனே சபாநாயகர், "அமைச்சர் கீர்த்தனா பட்டாசு ஆலைகள் குறித்த பல நல்ல விஷயங்களை இங்கே எடுத்து சொன்னார். ஆனால், அந்த ஊழல் என்ற வார்த்தையை மட்டும் தவிர்த்திருக்கலாம்.. ஆதாரம் இல்லாமல் அதை சொல்லக்கூடாது.. அசோசியேஷனில் சிலர் சொல்லியிருந்தாலும், அதை இங்கே கொண்டு வர தேவையில்லை. அமைச்சர் தவிர்த்திருக்கலாம்..

    கடந்த காலத்தில் ஊழல் நடந்ததாக 4 பேர் புகார் சொல்வதாக நீங்கள் சொல்கிறீர்கள். பதிலுக்கு தங்கம் தென்னரசும், 40 பேர் தவெக பற்றி புகார் சொல்வதாக சொல்கிறார்.. இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.. சவாலுக்கு எதிர் சவால் விடுவதற்கு இது நேரம் கிடையாது.. எனவே, நாம் அடுத்த விவாதத்திற்கு செல்லலாம். ஊழல் என்று அமைச்சர் கீர்த்தனா சொன்ன வார்த்தையை அவைக்குறிப்பிலிருந்து நீக்குகிறேன்" என்று விவாதத்தை முடித்து வைத்தார் சபாநாயகர்.

    English Summary

    Keerthana’s One Word Sparks Drama.. Thangam Thennarasu Suddenly Walks Down, Assembly Momentarily Stunned