அவர் கிறிஸ்தவர்.. கலப்பு திருமணத்துக்கு வீட்டில் கிளம்பிய எதிர்ப்பு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சொன்ன வார்த்தை

  • சென்னை: ''என்னுடைய கணவர் கிறிஸ்தவர். இதனால் என்னுடைய வீட்டிலும் திருமணத்துக்கு சம்மதம் பெறுவதற்கு முன்பு சில பிரச்சனைகளை எதிர்கொண்டேன்'' என்று நடிகர் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் கடந்த 2024ம் ஆண்டில் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கரம்பிடித்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய காதல் திருமணம் பற்றிய சுவராசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

    Advertisement

    தமிழ் உள்பட தென்மாநில மொழிப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை கரம்பிடித்தார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கோவாவில் திருமணம் செய்து கொண்டனர்.

    Advertisement

    இந்த திருமணம் தமிழ் பிராமின் முறைப்படியும், கேரளா கிறிஸ்தவர் முறைப்படியும் நடந்தது. இருவரும் மாற்று மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தான் தனது காதல் திருமணத்துக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

    இதுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறியதாவது: ''நான் பிளஸ் 2 முடித்து கல்லூரி படிப்பின்போது ஆண்டனி தட்டிலுடன் அறிமுகம் கிடைத்தது. இருவரும் 2009 டிசம்பரில் சந்தித்தோம். 2010 ஜனவரியில் பழக தொடங்கினோம். இருவரும் சேர்ந்து 'டேட்டிங்' சென்றோம். 2024ல் திருமணம் செய்து கொண்டோம்.

    எனக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்தது. அப்போது என்னுடைய டைரியை என் அம்மாஎடுத்து படித்துவிட்டார். அதில் என்னுடைய ரிலேஷன்ஷிப் தொடர்பான மொத்த விவரமும் இருந்தது. 'நான் உன்னுடைய அம்மா... உன்னுடைய டைரியை படிக்கலாம்' என்று கூறினார். இதுதான் என்னுடைய வாழ்க்கையில் மோசமான பகுதி.

    Advertisement

    எனக்கு எழுதுவதற்கு பிடிக்கும். ஆனால் இந்த சம்பவத்துக்கு நான் டைரி எழுதும் பழக்கத்தையே நிறுத்திவிட்டேன். இப்போது அந்த டைரி எங்கு இருக்கிறது? என்பது தெரியவில்லை. உண்மையிலேயே அது கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் என் அம்மா அதனை எரித்து இருப்பார்கள் என நினைக்கிறேன்.

    அதோடு எனது கணவர் கிறிஸ்தவர். இதனால் என் வீட்டில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. என் குடும்பத்தினரை சம்மதிக்க வைக்க நீண்டகாலம் எடுத்து கொண்டேன். நான் நடிகையாவதற்கு முன்பே ஆண்டனி தட்டில் என்னை பார்த்திருந்தார். மேலும் நாங்கள் இருவரும் ஒன்றாக வளர்ந்தோம். அதனை தான் சிறப்பான விஷயமாக கருதுகிறேன்.

    Advertisement

    அதோடு திருமணம் முடிவு செய்த பிறகும் கூட பதற்றத்துடனும், மனஅழுத்தத்துடனே தான் இருந்தார். இங்கு எங்காவது கேமரா இருக்கிறதா? என்று அடிக்கடி கேட்டு வந்தார். எங்களை பொறுத்தவரை இருவருக்குமான காதலை ரகசியமாக வைப்பதில் சிக்கல் இருந்தது இல்லை'' என்றார்.

    கீர்த்தி சுரேஷின் கணவர் ஆண்டனி தொட்டில் தொழிலதிபராக உள்ளார். இவர் ஜன்னல்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இருவரும் 15 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    "My husband is a Christian. Because of this, I faced some challenges at home before getting approval for our marriage," says actress Keerthy Suresh. Having married her partner Antony Thattil in 2024, Keerthy Suresh has now-two years later-shared some interesting details about her love marriage.