தாய் சொல்லை தட்டாத மகன்! லாட்டரியில் பல லட்ச ரூபாயை அள்ளிய கேரள எலக்ட்ரிஷியன்! குபேர யோகம்தான்

  • சென்னை: வாழ்வாதாரத்திற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற சரத் சசிதரன், அங்குள்ள லாட்டரியில் டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். தனது தாய் மற்றும் மகள் கூறிய நம்பரை வைத்து அவர் டிக்கெட் வாங்கிய நிலையில், இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. பல லட்ச ரூபாய் தற்போது பரிசாக அடித்து இருப்பதால் சந்தோஷத்தில் திளைத்து வருகிறாராம். சரத் சசிதரனுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டியுள்ள நிலையில், இது குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆகி வருகின்றன.

    Advertisement

    கேரளாவை சேர்ந்தவர் சரத் சசிதரன். 33 வயதான இவர் 2007 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். சொந்த ஊரில் வேலை எதுவும் இல்லாததால், அமீரகம் சென்ற சரத் சசிதரன், அங்கு எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வந்தார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அமீரகம் சென்ற சசிதரன் அவ்வப்போது அங்குள்ள பிக் டிக்கெட் லாட்டரி வாங்கி வந்து இருக்கிறார்.

    Advertisement

    தாயார், மகள் கூறிய எண்ணில் லாட்டரி

    யாருக்கெல்லாமோ அதிர்ஷ்டம் திடீரென அடித்து அவர்களை பெரும் பணக்காரர் ஆக்கிவிடுகிறது.. நமக்கும் ஒருநாள் அதிர்ஷ்டம் கண்ணை திறக்காதா? என்ற ஆர்வத்தில் லாட்டரி டிக்கெட் வாங்கி வந்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்தும், சில நேரங்களில் தனியாகவும் லாட்டரி வாங்கி வந்து இருக்கிறார். பல வருடங்களாக லாட்டரி வாங்கி வந்தாலும் இதுவரை பணம் அடிக்கவில்லை.

    ரூ.33 லட்சம் பரிசு

    அவ்வளவுதான் நம்ம அதிர்ஷ்டம் போல.. என்று நினைத்து இருந்தவர், இந்த முறை டிக்கெட் வாங்கும் போது அவரது தாயார் மற்றும் மகள் கூறிய எண்ணை வைத்து லாட்டரி வாங்கியிருக்கிறார். நாம் வாங்கிய டிக்கெட்டிற்குதான் அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. இந்த டிக்கெட்டிற்காவது பணம் அடிக்குமா? என்று நினைத்தவருக்கு.. அவர் நினைத்தது அப்படியே நடந்துள்ளது. பிக் டிக்கெட் லாட்டரியில் 1 லட்சம் திர்ஹாம், இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் ரூபாய் பரிசாக விழுந்துள்ளது.

    Advertisement

    லாட்டரியில் பணம் விழுந்ததும் ஒரு நிமிடம் கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை என்பார்களே அதேபோல சந்தோஷத்தில் துள்ளி குதித்து இருக்கிறார். ஒரே நாளில் எதிர்பாராமல் லாட்டரி மூலம் அதிர்ஷ்டம் கொட்டியதால் மகிழ்ச்சி அடைந்த சர்த், அதை எப்படி செலவு செய்வது என்பது பற்றியும் தற்போதே திட்டம் வகுத்திருக்கிறார். தனது உடல்நலனுக்காக இந்த தொகையை பயன்படுத்த இருப்பதாகவும், அடுத்த லாட்டரி குலுக்கலிலும் பங்கேற்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.

    நெட்டிசன்கள் கருத்து

    பிக் டிக்கெட் லாடடரியில் சரத் போலவே, அகில் சந்திரன் ஆர்பி, சைதல்வி கரிடோன் வரிசாலி என்ற இரண்டு கேரள நபர்களுக்கும் பரிசு அடித்து இருக்கிறதாம். சரத் சசிதரனுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டியுள்ள நிலையில், இது குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆகி வருகின்றன.

    Advertisement

    நெட்டிசன்கள் இதுபற்றி கருத்து கூறுகையில், தாய் சொல்லை தட்டாத பிள்ளைக்கு பல லட்சம் பரிசு அடித்து இருக்கிறது என்று கூறியுள்ளனர். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "என்னதான் லாட்டரியில் பரிசு வென்றவருக்கு இது கொண்டாட்டமாக இருந்தாலும், லாட்டரியில் பரிசு கிடைக்கும் என பல லட்சம் பேருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். எனவே, இதில் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

    English Summary

    Kerala electrician Sarath Sasidharan, who travelled to the United Arab Emirates for work, bought a lottery ticket there using numbers suggested by his mother and daughter. Luck smiled on him as the ticket won a prize worth several lakhs of rupees, leaving him thrilled.