மீண்டும் கோட்டை விட்ட சிஎம்டிஏ..கிளாம்பாக்கம் ஸ்கைவாக் இப்போதைக்கு இல்லை! தீபாவளிக்கு திண்டாட்டம்தான்

  • சென்னை: சென்னை கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் வருவதற்காக ஸ்கைவாக் அமைக்கப்படும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தீபாவளிக்கு திறக்கப்படும் என பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பணிகள் முடியாததால் அதற்கான வாய்ப்புபுகள் இல்லை. எனவே இனி பொங்கல் பண்டிகைக்கு முன்பாவது இந்த ஸ்கைவாக் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பேருந்து நிலையம் காரணமாக நகருக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.

    Advertisement

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

    கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் சென்னையின் நகருக்கு வெளியே இருப்பதால் சிட்டிக்குள் இருந்து பேருந்து நிலையம் செல்வதற்கே 1 - 2 மணி நேரம் ஆவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். சென்னை நகருக்குள் எங்கு இருந்தாலும் பேருந்தை பிடித்தே இந்த பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.

    இதனால் டிராபிக்கில் சிக்கி கூடுதல் நேரம் ஆகிகிறது. இதனை கருத்தில் கொண்டு வண்டலூருக்கும் ஊரப்பாக்கத்திற்கும் நடுவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்க முந்தைய திமுக அரசு திட்டமிட்டது. இதற்கு ரயில்வேயும் ஒப்புதல் அளித்தது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து நேராக நடைபாதை மூலமாக பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் விதமாக ஸ்கைவாக் ஒன்றும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    Advertisement

    தீபாவளிக்குள் ஸ்கைவாக் திறக்கப்படாது

    இதற்கான பணிகள் தொடங்கு முழு வீச்சில் நடைபெற்றன. இடையில் இடப்பிரச்சினை காரனமாக சற்று தொய்வு ஏற்பட்டது. எனினும் அவை தீர்ந்த பிறகு பணிகள் மீண்டும் வேகமெடுத்ததது. இதனால், வரும் தீபாவளிக்குள் இந்த ஸ்கைவாக் பணிகள் முடிந்து பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தீபாவளிக்கு முன்பே திறக்க டெட்லைன் முடிவு செய்து இருப்பதக தகவல் வெளியானது.

    ஆனால், தற்போது பணிகள் முடிவடையாதால் தீபாவளிக்கு முன்பாக திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியூர் செல்வது வழக்கம். இதனால் கிளாம்பாக்கத்திற்கு ரயில் நிலைய இணைப்பு வசதி இருந்தால் பயணிகள் எளிதாக வந்து செல்ல முடியும். தற்போது இந்த ஸ்கைவாக் திறக்கப்படாததால் பயணிகள் பேருந்தை பிடித்து படாத பாடு பட்டே கிளாம்பாக்கம் வந்து சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    பொங்கலுக்கு முன்பாக திறக்கப்படுமா?

    கிளாம்பாக்கம் ஸ்கைவாக் பணிகள் தாமதமாவது குறித்து சிஎம்டிஏ மூத்த அதிகாரி கூறுகையில், "ஜிஎஸ்டி சாலையை கடக்கும் ஸ்கைவாக் அமைக்கும் பணி டெக்னிக்கலாக சவாலானதாக உள்ளது. இடையில் தூண்கள் அமைக்காமல், 33 மீட்டர் மற்றும் 43 மீட்டர் நீளமுள்ள இரண்டு பாலப் பகுதிகளை அமைக்க வேண்டியுள்ளது. முழுமையாக கான்டிலீவர் முறையில் நீட்டிக்கப்பட்டு அமைக்கப்படுவதால், இந்தப் பணிகளை சாதாரணமாக மேற்கொள்ள முடியாது. பாலத்தில் எந்தவிதமான வளைவும் ஏற்படக்கூடாது.

    பேருந்து முனையம் அமைந்துள்ள பகுதியில் முதல் அடுக்கின் அடியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகத் தாங்கு தூண்கள் விரைவில் அகற்றப்படும். இரண்டாவது அடுக்கு தீபாவளிக்குப் பிறகு பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார். பணிகள் இன்னும் முடியாத நிலையில் பொங்கலுக்கு முன்பாகவாது திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. டிசம்பருக்கு முன்பாக திறக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கம் போல இந்த டெட்லைனும் மிஸ் ஆகிறதா? இல்லை பொங்கலுக்கு முன்பாக திறக்கப்படுமா? என்பது வரும் நாட்களில்தான் தெரியும்.

    English Summary

    Kilambakkam Skywalk: Construction work on a skywalk—designed to connect the railway station to the bus terminus in Kilambakkam, Chennai—has been progressing in full swing, leading passengers to expect that it would be opened in time for Diwali. However, the CMDA has stated that there is no possibility of the skywalk being opened for now, leaving passengers disappointed.