கேஎன் நேரு கோபம்.. அமைச்சரின் இரண்டு இரண்டு பேச்சுக்கு செம கவுன்டர்.. அவையில் சிரிப்பலை

  • சென்னை: தமிழக சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவையில் பல்வேறு துறை சார்ந்த விவாதங்களும், கேள்விகளுக்கு அமைச்சர்களின் பதில்களும் இடம்பெற்று பேரவையின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.. அந்தவகையில் நேற்று நகராட்சி நிர்வாகத் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.. அதேசமயம் கலகலப்பாகவும் நடைபெற்றது.. இதற்கு காரணம் மூத்த தலைவர் கேஎன் நேருதான்.. திடீரென மைக்கை பிடித்து நேரு தந்த கவுன்டர் ஒன்று, சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

    Advertisement

    இந்த முக்கிய விவாதத்தின்போது உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் திடீரென எழுந்து பேசினார். அப்போது அவர், "59 ஆண்டுகள் கழித்து முடியாது என்றார்கள், முடியாது என்றார்கள். அரசியல் நகர்வுகள் நடக்காது என்றார்கள், முடியாது என்றார்கள் நடக்காதது என்றார்கள்...

    Advertisement

    இரண்டு இரண்டு முறை

    அரசியல் பகல் கனவு என்றார்கள், சாத்தியமே இல்லை என்று சொன்னார்கள்.. அரசியல் வியாக்கியானம் பேசுகிறார்கள் என்று சொன்னார்கள்.. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் மட்டுமே கூட்டணி ஆட்சி என்று சொன்னார்கள்.

    2024 விக்கரவாண்டி மாநாட்டில், 2024 விக்கரவாண்டி மாநாட்டில் விஜய் அறிவித்தார்கள், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவித்தார்கள்" என்று தன்னுடைய உரையில் கவிதை நயத்தோடு பேசினார்.. அதாவது ஒவ்வொரு வரியையும் இரண்டு இரண்டு முறை கவிதை போல பேசி, கூட்டணி ஆட்சி பற்றி கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்..

    இப்படி பேசினால் இது எப்போ முடியும்

    அமைச்சர் தன்னை மறந்து இப்படி கவித்துவமாக பேசி கொண்டிருந்தபோதே, திடீரென குறுக்கிட்டு பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, "உயர்கல்வித் துறை அமைச்சர், அந்த உயர்கல்வி மானியத்தை விட்டு விட்டு அரசியல் பேசுகிறார். எதை பேசணுமோ, அதை தானே இங்கே பேச வேண்டும்.

    Advertisement

    நீங்க, முடியாது என்கிறார்கள், தர முடியாது என்று சொன்னார்கள், தரேன்னு சொல்லிட்டு ஏமாற்றினால் தான் தப்பு. நாங்க தர முடியாது தனித்து நிற்போம் என்று சொன்னோம். தர முடியாது என்று சொன்னார்கள், வாய்ப்பில்லை என்று சொன்னார்கள், பார்க்க முடியாது என்று சொன்னார்கள் என்று ஒவ்வொரு வார்த்தையும் இரண்டு இரண்டு முறை பேசுகிறார்.

    அவர் கவிஞராக இருக்கலாம், ஆனால் அதுக்காக எல்லாவற்றையும் இரண்டு இரண்டு தடவையா பதிவு பண்றது? இரண்டு இரண்டு வரியாக பதிவு செய்தால் எத்தனை மணிக்கு..ங்க இதை முடிக்கிறது?" என்று கிண்டலாக கேட்டார்.

    வெறி ஆயிட்டாரு கேஎன் நேரு

    நேருவின் இந்த பதிலை அவையில் யாருமே எதிர்பார்க்கவில்லை.. ஒட்டுமொத்த சட்டமன்றமும் மேஜையை தட்டி, சிரித்து விட்டார்கள்.. அதுவரை அமைச்சரின் பேச்சால் சமாளித்து கொண்டிருந்த, சபாநாயகரும், நேருவின் பேச்சை கேட்டு சிரித்து விட்டார்.

    Advertisement

    இந்த சுவாரஸ்யமான அரசியல் உரையாடலும், கவிதை மோதலும், சட்டப்பேரவை நிகழ்வுகளில் மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. "வெறி ஆயிட்டாரு கேஎன் நேரு" என்ற தெறிக்க விடும் கேப்ஷனுடன் இணையத்தில் படுஜோராக வலம் வந்து கொண்டிருக்கிறது..!!

    English Summary

    KN Nehru Funny Counter in TN Assembly.. Minister’s Two Two Speech Sparks Laughter Across the House