சென்னை: கொளத்தூர் தொகுதியில மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை என்ற திமுகவின் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், 14 வார்டுகளில் பதிவான வாக்குகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அங்கு பதிவான வாக்குகள் சரிபார்ப்பு பணியும், மாதிரி வாக்கு பதிவும் நடைபெற்றது. இந்நிலையில், கொளத்தூரில் எந்த தவறும் நடக்கவில்லை என முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினை தேற்கடித்த கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு கூறியுள்ளார்.
2026 தமிழக சட்ட்சபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விஎஸ் பாபு போட்டியிட்டார். முதல்வராக இருந்த முக ஸ்டாலின் 74 ஆயிரத்து 22 வாக்குகள் பெற்ற நிலையில், விஎஸ் பாபு 82997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சுமார் 80700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் ஸ்டாலின். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இருந்த போதும் நேரடியாக மக்களை சந்தித்து நன்றி தெரிவித்திருந்தார் ஸ்டாலின். இந்த நிலையில் தான் அதிரடி திருப்பமாக தேர்தல் ஆணையத்தை நாடினார் முக ஸ்டாலின். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 14 பூத்துகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்ததா என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும், அந்த பூத்துகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்து அதில் எந்தவித குளறுபடியும் இல்லை என்பதை தங்கள் முன்னிலையில் செய்து காட்ட வேண்டும் என விண்ணப்பித்திருந்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி, 2024 மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில், இப்படி ஒரு சரிபார்ப்பு நடந்த நிலையில், அந்த அடிப்படையில் தனக்கும் அதே போல செய்து காட்ட வேண்டும் என விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம் சட்டப்படி பரிசளிக்கப்பட்டு கடந்த 29ஆம் தேதி முதல் 14 பூத்துகளில் பதிவான வாக்குப்பதிவு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டது. கடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில், 29ஆம் தேதி காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரங்கள் மீண்டும் சரி பார்க்கப்பட்டதோடு, மாதிரி வாக்குபதிவும் நடைபெற்றது. இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் 8 வாக்கு என்னும் இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்பன உள்ளிட்ட சில புகார்களை கூறிய திமுக நீதிமன்றம் செல்லப் போவதாக கூறியது. அதே நேரத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டன எனவும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதரமும் இல்லை என விளக்கம் அளித்தார். இந்நிலையில், கொளத்தூரில் எந்த தவறும் நடக்கவில்லை என முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினை தேற்கடித்த கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," கொளத்தூரில் நடைபெற்ற 2026 தமிழக சட்டசபை தேர்தலிலும், வாக்கு எண்ணிக்கையிலும் எந்த தவறும் நடக்கவில்லை. அனைத்தும் சரியாக உள்ளது என அதிகாரி சமீரனே சொல்லிவிட்டார். 3 இயந்திரங்கள் வேலை செய்யவில்லை, சீல் ஒட்டப்பட்ட அடையாள எண் மாறுபட்டிருந்தது, டேக் புத்தம் புதிதாக உள்ளது என்பன உள்ளிட்ட திமுகவினரின் குற்றச்சாட்டு அனைத்தும் பொய்.. அனைத்தையும் சந்திக்க நான் தயார்.. எங்கள் கட்சி தலைமையும் தயாராக உள்ளது" என கூறியுள்ளார்.கொளத்தூர் தொகுதி
மு.க. ஸ்டாலின்
வாக்குப்பதிவு இயந்திரங்கள்
விஎஸ் பாபு
திமுகவுக்கு சவால்