VS Babu: விஎஸ் பாபுவுக்கு என்ன ஆச்சு? உடல்நிலை குறித்து தெரியப்படுத்துங்க.. பொங்கி எழுந்த அதிமுக இன்பதுரை

  • சென்னை: கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் எம்.எல்.ஏ விஎஸ் பாபு உடல்நிலை குறித்து அரசு மற்றும் மருத்துவனை தரப்பில் இருந்து உறுதியான அறிக்கை வெளியாகி 19 நாட்கள் ஆகிறது. இதுவரை அவரது உடல்நிலை, என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பதுரை, விஎஸ் பாபுவின் உடல்நிலை குறித்த வெளிப்படைத்தன்மை வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    உடல்நிலை முன்னேற்றம் குறித்த விபரங்களை தொகுதி மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை! பொதுநலன் கருதி, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    விஎஸ் பாபு உடல்நிலை

    கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏவும், தவெகவை சேர்ந்தவருமான வி எஸ் பாபுவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வீட்டில் இருந்த போது இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து குடும்பத்தினர் அவரை சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மறுநாள் மருத்துவனையில் இருந்து அறிக்கை வெளியானது. இதில் சுவாசக் கோளாறு காரணமாக விஎஸ் பாபு மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது உடல்நிலை நலமாக உள்ளது. சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது. ஒருசில நாட்களில் வீடு திரும்புவார் என அறிக்கை வெளியானது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் இவ்வாறே தெரிவித்தனர்.

    Advertisement

    என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது?

    ஆனால் அடுத்தடுத்த நாட்களிலும் விஎஸ் பாபுவுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜும் நேரில் சென்று நலம் விசாரித்தார். ஆனால் அவரும் விஎஸ் பாபு எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்ற தகவலை கூறவில்லை. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து விஎஸ் பாபுவிற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து அறிக்கை வெளியானது.

    கொளத்தூர் எம்.எல்.ஏ விஎஸ் பாபு உடல்நிலை இப்போ எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் சொன்னது என்ன?

    அதில், மூச்சுத்திணறல் காரணமாக அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஎஸ் பாபு உடல் நிலையை பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். விஎஸ் பாபு உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்டு இருந்தது.

    Advertisement

    வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துங்க

    ஆனால் அதற்கு பிறகு 19 நாட்கள் ஆகியும் இன்னமும் மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அரசுத் தரப்பிலும் அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை. முதல்வர் விஜய்யும் விஎஸ் பாபு உடல் நிலை பற்றி போனில் கேட்டறிந்ததாக அமைச்சர் அருண்ராஜ் கூறியிருந்தார். ஆனாலும் இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிப்படையாக வெளியாகாததால் இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பதுரை அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    14 நாட்களாக ஐசியுவில் விஎஸ் பாபு.. 3 நாட்களாக மருத்துவ அறிக்கை கூட இல்லை.. அதிகரிக்கும் குழப்பம்
    Advertisement

    அவர் கூறுகையில், "கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்த விபரங்களை தொகுதி மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை! பொதுநலன் கருதி, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பு" என்று கூறியுள்ளார்.

    English Summary

    VS Babu: It has been 19 days since a definitive statement regarding the health of VS Babu—the MLA for the Kolathur constituency representing the Tamilaga Vettri Kazhagam—was issued by the government or the hospital. So far, no information has been released concerning his condition or the nature of the treatment being administered. Against this backdrop, former AIADMK Minister Inbadurai has urged the government to ensure transparency regarding VS Babu's health status.