VS Babu: கொளத்தூர் தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சை.. என்னாச்சு அவருக்கு?

  • சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் விஎஸ் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம் ஜி எம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என உறவினர்கள் தெரிவித்தனர்.

    Advertisement

    கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஎஸ் பாபு (வயது 75). நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    Advertisement

    மூச்சுத் திணறல் ஏற்பட்டது

    எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. வயது மூப்பு காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இது பற்றி அவரது உறவினர்கள் கூறுகையில், நேற்று இரவு வீட்டில் இருக்கும் போது விஎஸ் பாபுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் அப்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். விரைவில் வீடு திரும்புவார் என்று கூறினர்.

    Advertisement

    வட சென்னை திமுக மாவட்ட செயலாளர்

    கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட விஎஸ் பாபு வெற்றி பெற்றார். திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை வீழ்த்தியதன் மூலம் தேசிய அளவில் விஎஸ் பாபு ஒரே நாளில் பிரபலம் அடைந்தார். ஸ்டாலினை சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார்.

    விஎஸ் பாபு வட சென்னை திமுக மாவட்ட செயலாளராக இருந்தவர். 2006 சட்டசபை தேர்தலில் புரசைவாக்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டு புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உதயமானது. அந்த தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டதால், விஎஸ் பாபுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் ஸ்டாலின் வெற்றிக்காக உழைத்த விஎஸ் பாபு, பிறகு கட்சியில் தனக்கு போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என அதிருப்தியில் இருந்தார்.

    Advertisement

    அதிமுகவில் இருந்து நீக்கம்

    இதனால், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால், அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார். 2018 ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட விஎஸ் பாபு மீண்டும், அதிமுகவில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் அவருக்கு கட்சியில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இந்த சூழலில்தான் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தவெகவில் ஐக்கியம் ஆன விஎஸ் பாபுவுக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விஜய் வாய்ப்பு அளித்தார்.

    English Summary

    VS Babu: Reports indicate that VS Babu, the TVK candidate for the Kolathur constituency, has been admitted to the hospital. He was reportedly admitted to a private hospital in Aminjikarai, Chennai, after experiencing breathing difficulties during the night.