கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.. சென்னையில் காவு வாங்கப்பட்ட 9 வயது மகன்

  • சென்னை: சென்னை கோயம்பேட்டில் அம்மா கண் முன்னாடியே 9 வயது மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,, கணவரை பிரிந்து மகனை தனியாக வளர்த்து வந்த பூவரசியின் வாழ்க்கையில் சில மாதங்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வன் வந்துள்ளார். ஆனால், அந்தப் பழக்கம் கடைசியில் 9 வயது சிறுவனின் உயிரையே பறிக்கும் அளவுக்கு சென்றுள்ளது... இதுகுறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    Advertisement

    கோயம்பேடு நியூ காலனி 8-வது தெருவைச் சேர்ந்தவர் 30 வயதான பூவரசி. சுமார் 10 வருடங்களுக்கு முன்பு தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தருண் என்ற 9 வயது மகன் உள்ளார்..

    Advertisement

    கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு

    தருணுக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே பூவரசிக்கும் தீபக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீபக், மனைவி மற்றும் மகனைப் பிரிந்து சென்றுவிட்டார்... அதன்பிறகு மகனை தனியாக வளர்த்து வந்த பூவரசி, கூலி வேலை செய்து குடும்பத்தையும் கவனித்து வந்துள்ளார்.

    இந்த சூழலில்தான் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு பூவரசிக்கு தமிழ்ச்செல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது... அந்தப் பழக்கம் நெருக்கமாக மாறி, தவறான உறவுக்கும் இட்டுச்சென்றுள்ளது.. இதையடுத்து,

    கடந்த 3 மாதங்களாகவே பூவரசி, தனது மகன் தருண் மற்றும் தமிழ்ச்செல்வனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.. அப்போதுதான், பூவரசிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருப்பதாக தமிழ்ச்செல்வன் சந்தேகித்துள்ளார். இதனால் பூவரசியிடம் அடிக்கடி சண்டை போட்டதாக தெரிகிறது.

    Advertisement

    மதுபோதையில் தகராறு

    இந்நிலையில், கடந்த செப்டம்பர் 29ம் தேதி இரவு பூவரசியும் தமிழ்ச்செல்வனும் வெளியே சென்றுவிட்டு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளனர். அப்போது 2 பேருமே மது குடித்துள்ளனர்.. அப்போது அங்கிருந்த சில பெண்களுக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்களும் தமிழ்ச்செல்வனை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள்.

    இதையெல்லாம் பார்த்த பூவரசி, தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த தமிழ்ச்செல்வன், அந்த பெண்களை தட்டிக்கேட்காதது ஏன்? என்று கேட்டு பூவரசியை தாக்கியிருக்கிறார்.. அத்துடன் போதை தலைக்கேறியிருந்த நிலையில், தன்னுடைய கையையும் அறுத்து கொண்டுவிட்டார்..

    Advertisement

    9 வயது சிறுவன் பரிதாபம்

    இது பற்றி அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து முதல் உதவி சிகிச்சை அளித்தனர். காயம் சிறியதாக இருந்ததால் தமிழ்ச்செல்வனை மருத்துவமனையில் அனுமதிக்காமல், அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் தமிழ்ச்செல்வனுக்கு மேலும் கோபம் அதிகமானது..

    உடனே பூவரசி வீட்டுக்குள் ஆவேசத்துடன் நுழைந்துள்ளார் தமிழ்ச்செல்வன்.. உடனே அங்கிருந்த 9 வயது தருண், "ஏன் அப்பா இப்படி வந்திருக்கீங்க? என்ன ஆச்சு?" என்று கேட்டதாக தெரிகிறது.. உடனே தமிழ்ச்செல்வன், தருணின் கழுத்தை நெரித்துள்ளார்.. வலியால் தருண் அலறியும் தமிழ்ச்செல்வன் விடவில்லை.. தொடர்ந்து கழுத்தை நெரித்ததில், அந்த நிமிடமே துடிதுடித்து இறந்துவிட்டான் தருண்..

    Advertisement

    உன் மகனை கொன்னுட்டேன்

    பிறகு பூவரசிக்கு போனை போட்டு, "உன் மகனை கொன்னுட்டேன்" என்று கூறியிருக்கிறார்.. இதைக் கேட்டு பதறிப்போன பூவரசி, உடனடியாக வீட்டுக்கு ஓடிவந்தள்ளார்.. அப்போது தருண் கட்டிலில் சடலமாக கிடைந்ததை கண்டு கதறி அழுதார்.. பூவரசியின் அலறரை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர்... சிறுவன் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த அவர்கள் உடனடியாக போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் கிடைத்ததும் கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தருணின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    கணவனைப் பிரிந்து மகனை தனியாக வளர்த்து வந்த ஒரு தாயின் வாழ்க்கையில், சில மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு பழக்கம் இப்படி ஒரு சோகத்தில் முடிந்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Koyambedu Bus Stand.. Couple’s Secret Affair.. 9 year old Boy’s Life Lost in Chennai.. What Happened?