கிளாம்பாக்கத்திற்கு பதில் மீண்டும் கோயம்பேடு? முதல்வர் விஜய்க்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடிதம்

  • சென்னை: கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யம் முழு​மை​யான வசதி​யை​யும் எளி​தான அணுகலை​யும் வழங்​க​வில்லை என்​பது பயணி​களின் கருத்​தாக உள்​ளது. தற்​போது, சென்​னையி​லிருந்து கிளாம்​பாக்​கம் செல்ல பயணி​கள் தனி​யார் வாக​னங்​கள், கூடு​தல் அரசு மாநகரப் பேருந்​துகளை பயன்​படுத்த வேண்​டிய நிலை உள்​ளது. எனவே தென் மாவட்ட பேருந்​துகளை மீண்​டும் கோயம்​பேட்​டில் இருந்து இயக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்​டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர் சங்​கம் கோரிக்கை வைத்துள்ளது.

    Advertisement

    சென்னை கோயம்பேட்டில் ஒரு நாளில் 3000 வெளியூர் பேருந்துகள் வந்து சென்றன. இதனால் தினமும் காலை மற்றும் மாலையில் ஆம்னி பேருந்துகளாலும், அரசு பேருந்துகளாலும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னைக்கு வெளியே தாம்பரத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் கட்டுமான பணிகள் தொடங்கின. இந்த பணிகள் ஸ்டாலின் ஆட்சி காலத்தில் நிறைவு பெற்றது.

    Advertisement

    அப்போதுதான் பேருந்து நிலையம் அமைந்துள்ள ஊர் கிளாம்பாக்கம் என்பதே மக்களுக்கு தெரியும். ஏனெனில் வண்டலூர், ஊரப்பாக்கமே மக்களுக்கு தெரியும். பேருந்து நிலையம் வந்ததால் கிளாம்பாக்கம் என்ற அடையாளமே வெளியில் தெரிந்தது. கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் தான் அரசு பேருந்துகள் இயங்குகின்றன. ஆனால் ஆம்னி பேருந்துகள் வேளச்சேரியை தலமாக ஒரு கொண்டு கணிசமான பேருந்துகள் ஓஎம்ஆர் சாலையை சுற்றி சென்னையில் பாதி மக்களை ஏற்றி செல்கின்றன.

    மறுபுறம் கோயம்பேடுவை மையமாக கொண்டு கணிசமான பேருந்துகள் இயங்குகின்றன. இதில் வேளச்சேரி வழி பேருந்துகள் சென்னை மாநகருக்குள் செல்கின்றன.ஆனால் கோயம்பேடு பேருந்துகள் சென்னைக்குள் செல்லாமல் போரூர் பைபாஸ் வழியாக செல்கின்றன. எனினும் முழுமையாக அனைத்து ஆம்னி பேருந்துகளும் செல்வது இல்லை.. இந்த சூழலில் பழைய படி, தென் மாவட்ட பேருந்​துகளை மீண்​டும் கோயம்​பேட்​டில் இருந்து இயக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்​டும் என முதல்வர் விஜய்க்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

    Advertisement

    இதுபற்றி அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர் சங்​கத் தலை​வர் அன்​பழகன் முதல்​வர் விஜய்க்கு எழு​திய கடிதத்​தில் கூறுகையில், "சென்னை நகரில் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைப்​ப​ தற்​கும், சுற்​றுச்​சூழல் மாசு​பாட்​டைக் கட்​டுப்​படுத்​து​வதற்​கும் கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யம் உரு​வாக்​கப்​பட்​டது.

    ஆனால் கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யம் முழு​மை​யான வசதி​யை​யும் எளி​தான அணுகலை​யும் வழங்​க​வில்லை என்​பது பயணி​களின் கருத்​தாக உள்​ளது. தற்​போது, சென்​னையி​லிருந்து கிளாம்​பாக்​கம் செல்ல பயணி​கள் தனி​யார் வாக​னங்​கள், கூடு​தல் அரசு மாநகரப் பேருந்​துகளை பயன்​படுத்த வேண்​டிய நிலை உள்​ளது.

    இதனால் நேர விரய​மும் போக்​கு​வரத்து நெரிசலும் சுற்​றுச்​சூழல் மாசு​பாடும் அதி​கரித்து வரு​கிறது. குறிப்​பாக, நகரின் மத்​திய மற்​றும் வடக்கு பகு​தி​களி​லிருந்து வரும் பயணி​கள் 2 மணி நேரத்​துக்​கும் மேலாக பயணம் செய்து கிளாம்​பாக்​கம் செல்ல வேண்​டிய சூழல் உள்​ளது.

    Advertisement

    கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​துக்கு மெட்ரோ ரயில், மின்​சார ரயில் இணைப்​பு​கள் இது​வரை முழு​மை​யாக செயல்​படுத்​தப்​ப​டாத​தால், மக்​கள் அதிக சிரமத்​துக்கு உள்​ளாகின்​றனர்.

    கோயம்​பேடு பேருந்து நிலை​யம் சென்​னை​யின் மையப்​பகு​தி​யில் அமைந்​துள்​ள​தால், மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து மற்​றும் பிற பொதுப் போக்​கு​வரத்து வசதி​கள் போது​மான அளவில் உள்​ளன.

    சென்​னை​யின் அனைத்து பகு​தி​களி​லிருந்​தும் பயணி​கள் எளி​தாக கோயம்​பேடு வந்​தடைந்து தென் மாவட்​டங்​களுக்கு பயணம் செய்ய முடி​யும். சென்னை நகருக்​குள் தினசரி பள்​ளி, கல்​லூரி, தொழிற்​சாலை மற்​றும் ஐ.டி. நிறு​வனங்​களுக்கு 10,000-க்​கும் மேற்​பட்ட பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.ஆனால் வெளியூருக்கு செல்​லும் பேருந்​துகள் சுமார் 3,000 மட்​டுமே இயக்​கப்​படு​கின்​றன. எனவே வெளியூர் பேருந்​துகள்​தான் சென்னை போக்​கு​வரத்து நெரிசலுக்​கான முக்​கிய காரணம் என்ற கருத்து சரியல்ல.

    Advertisement

    எனவே, பயணி​களின் நலனைக் கருத்​தில் கொண்​டு, கோயம்​பேடு பேருந்து நிலை​யத்​திலிருந்​தும் அரசுப் பேருந்​துகள் மற்​றும் தென் மாவட்ட சேவை​களை மீண்​டும் இயக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்​டும் என்​று, பயணி​கள் சார்​பாக கோரிக்கை வைக்​கிறோம்​ " இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Passengers traveling from Chennai to Kilambakkam are currently compelled to rely on private vehicles or additional government city buses. Consequently, the All Omni Bus Owners Association has requested that the Tamil Nadu government reconsider operating buses bound for the southern districts from Koyambedu once again.