கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்

  • சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டத்திற்கு ஆம்னி பேருந்து இயக்கப்படுகிறது ஏன் அரசு பேருந்து இயக்கப்படவில்லை எனவும், அதே போல் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் பேருந்து கிடைக்கவில்லை.. அதேபோல் இங்கிருந்து தென் மாவட்டத்திற்கு செல்ல பேருந்து கிடைக்கவில்லை என்று கிளாம்பாக்கம் ஆய்வின் போது அமைச்சரை நேருக்கு நேர் பயணி ஒருவர் கேள்பி எழுப்பி உள்ளார். அவருக்கு அமைச்சர் தமிழன் பார்த்திபன் அளித்த பதிலை பார்ப்போம்.

    Advertisement

    சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1981 பேருந்துகள் இங்கிருந்து தென் மாவட்டத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது எனவும், சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளுக்கு என்னென்ன வகையில் சிரமத்தை குறைக்கலாம் எனவும் அமைச்சர் தமிழன் பார்த்திபன் கூறினார்.

    Advertisement

    ஒரே வழியில் பேருந்து உள்ளே வருவதால் போக்குவரத்து துறை செய்யப்படுகிறது மாற்று வழியில் பேருந்தை பேருந்து நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் அதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது எனவும் அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது கிளாமபாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த பழனி ஒருவர் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டத்திற்கு ஆம்னி பேருந்து இயக்கப்படுகிறது.. ஏன் அரசு பேருந்து இயக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் பேருந்து கிடைக்கவில்லை அதேபோல் இங்கிருந்தும் தென் மாவட்டத்திற்கு செல்ல பேருந்து கிடைக்கவில்லை என அமைச்சருடன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும்போதே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட அமைச்சர் தமிழன் பார்த்திபன் உங்கள் கோரிக்கையை சரி செய்யப்படும் என சமாளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    Advertisement

    பயணி கேட்டது போலவே அரசு பேருந்தில் வரும் பயணிகள் மட்டும் கிளாம்பாக்கத்திலேயே இறங்க வேண்டும் என்பதும், ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேடு வரை பயணிகளை ஏற்றி இறக்கலாம் என்பதும் எந்த வகையில் நியாயமே இல்லை. இதுபோன்ற கடந்த ஆட்சியில் இருந்தே தொடர்கிறது என்றாலும், எல்லாருக்கும் ஒரே நியாயம் இருக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல் வேளச்சேரி வழித்தடத்தில் தனியாக ஆம்னி பேருந்துகள் இயங்குகின்றன. அதேபோல் அரசு பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. ஏன் அரசு பேருந்துகளும், ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும் பயணிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    Advertisement

    முன்னதாக கடந்த வாரம் அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர் சங்​கத் தலை​வர் அன்​பழகன் முதல்​வர் விஜய்க்கு எழு​திய கடிதத்​தில் கூறுகையில், "சென்னை நகரில் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைப்​ப​தற்​கும், சுற்​றுச்​சூழல் மாசு​பாட்​டைக் கட்​டுப்​படுத்​து​வதற்​கும் கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யம் உரு​வாக்​கப்​பட்​டது.

    ஆனால் கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யம் முழு​மை​யான வசதி​யை​யும் எளி​தான அணுகலை​யும் வழங்​க​வில்லை என்​பது பயணி​களின் கருத்​தாக உள்​ளது. தற்​போது, சென்​னையி​லிருந்து கிளாம்​பாக்​கம் செல்ல பயணி​கள் தனி​யார் வாக​னங்​கள், கூடு​தல் அரசு மாநகரப் பேருந்​துகளை பயன்​படுத்த வேண்​டிய நிலை உள்​ளது. இதனால் நேர விரய​மும் போக்​கு​வரத்து நெரிசலும் சுற்​றுச்​சூழல் மாசு​பாடும் அதி​கரித்து வரு​கிறது. குறிப்​பாக, நகரின் மத்​திய மற்​றும் வடக்கு பகு​தி​களி​லிருந்து வரும் பயணி​கள் 2 மணி நேரத்​துக்​கும் மேலாக பயணம் செய்து கிளாம்​பாக்​கம் செல்ல வேண்​டிய சூழல் உள்​ளது.

    Advertisement

    கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​துக்கு மெட்ரோ ரயில், மின்​சார ரயில் இணைப்​பு​கள் இது​வரை முழு​மை​யாக செயல்​படுத்​தப்​ப​டாத​தால், மக்​கள் அதிக சிரமத்​துக்கு உள்​ளாகின்​றனர்.

    கோயம்​பேடு பேருந்து நிலை​யம் சென்​னை​யின் மையப்​பகு​தி​யில் அமைந்​துள்​ள​தால், மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து மற்​றும் பிற பொதுப் போக்​கு​வரத்து வசதி​கள் போது​மான அளவில் உள்​ளன.

    சென்​னை​யின் அனைத்து பகு​தி​களி​லிருந்​தும் பயணி​கள் எளி​தாக கோயம்​பேடு வந்​தடைந்து தென் மாவட்​டங்​களுக்கு பயணம் செய்ய முடி​யும். சென்னை நகருக்​குள் தினசரி பள்​ளி, கல்​லூரி, தொழிற்​சாலை மற்​றும் ஐ.டி. நிறு​வனங்​களுக்கு 10,000-க்​கும் மேற்​பட்ட பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. ஆனால் வெளியூருக்கு செல்​லும் பேருந்​துகள் சுமார் 3,000 மட்​டுமே இயக்​கப்​படு​கின்​றன. எனவே வெளியூர் பேருந்​துகள்​தான் சென்னை போக்​கு​வரத்து நெரிசலுக்​கான முக்​கிய காரணம் என்ற கருத்து சரியல்ல.

    Advertisement

    எனவே, பயணி​களின் நலனைக் கருத்​தில் கொண்​டு, கோயம்​பேடு பேருந்து நிலை​யத்​திலிருந்​தும் அரசுப் பேருந்​துகள் மற்​றும் தென் மாவட்ட சேவை​களை மீண்​டும் இயக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்​டும் என்​று, பயணி​கள் சார்​பாக கோரிக்கை வைக்​கிறோம்​ " இவ்வாறு கூறிருந்தார்.

    English Summary

    Koyambedu Instead of Kilambakkam: Will Government Buses Depart Like Omni Buses? The Minister's Response