கோயம்பேடு பூவரசி வெளியே போன கொஞ்ச நேரத்தில் இப்படியா? காலம் தந்த கள்ளக்காதல் பரிசு.. சென்னை கதை

  • சென்னை: சென்னை கோயம்பேட்டில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாய் செய்த மாபெரும் தவறு, அவரது குழந்தையையே இன்று காவு வாங்கிவிட்டது.. மதுபோதையும், கள்ளக்காதலும் நாளுக்கு நாள் பல உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கின்றன.. அப்படித்தான் இந்த சம்பவமும் சென்னையில் நடந்துள்ளது...!!

    Advertisement

    கோயம்பேடு நியூ காலனியை சேர்ந்தவர் தீபக், 34. கூலி தொழிலாளி. இவரது மனைவி பூவரசி, 30. இந்த தம்பதிக்கு தருண் என்ற 9 வயது மகன் இருந்தான். தருண், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான்.

    Advertisement

    தீபக், பூவரசி இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தீபக், பூவரசியை விட்டு பிரிந்து சென்றார். அதன்பிறகு பெற்றோரின் உதவியுடன் பூவரசியும், அவரது மகன் தருணும் தனியாக வசித்து வந்தனர்.

    சென்னை கோயம்பேடு

    இந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த தமிழ்செல்வன், 35, என்பவருடன் பூவரசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ்செல்வன் கூலி வேலை செய்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது. அதேபோல், அவரும் தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

    Advertisement

    பூவரசிக்கும் தமிழ்செல்வனுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து தமிழ்செல்வன் அடிக்கடி குடிபோதையில் பூவரசியின் வீட்டுக்கு வருவார். 2 பேரும் தனியாக இருந்து வந்தனர். இப்படியாக அவர்களது தொடர்பு தொடர்ந்து வந்த நிலையில், சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு பூவரசிக்கும் தமிழ்செல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    ஆனாலும் அந்த தகராறுக்கு பிறகும் தமிழ்செல்வன் அடிக்கடி பூவரசியின் வீட்டுக்கு வந்து, அவருடன் ஜாலியாக தங்கிவிட்டு செல்வது தொடர்ந்துள்ளது.

    கள்ளக்காதல் தந்த பரிசு

    இந்த நிலையில் நேற்றிரவும் வழக்கம்போல தமிழ்செல்வன் பூவரசியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது திடீரென பூவரசிக்கும் தமிழ்செல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த பூவரசி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.. இதனால் தமிழ்செல்வனுக்கு மேலும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    அந்த நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பூவரசியின் மகன் தருணின் கழுத்தை ஆத்திரத்தில் நெரித்துவிட்டடார்.. இதில் தருண் வலி தாங்காமல் அலறி துடித்துள்ளான்.. அப்போதும் மனமிறங்காத தமிழ்செல்வன் வலுக்கட்டாயமாக சிறுவனின் வாயை பொத்தி, தொடர்ந்து இறுக்கமாக கழுத்தை நெரித்துள்ளார். சிறிது நேரத்தில் தருண் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான். இதற்கு பிறகு தமிழ்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    வெளியே சென்றிருந்த பூவரசி

    வெளியே சென்றிருந்த பூவரசி கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனது மகன் தருண் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதுள்ளார். அவரது அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதுபற்றி உடனடியாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தருணின் உடலை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் பூவரசி மற்றும் தமிழ்செல்வன் இடையேயான கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய தமிழ்செல்வனை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். தனிப்படை போலீசார் தமிழ்செல்வனை தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்..

    கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு, 9 வயது சிறுவனின் உயிரையே பறித்த சம்பவம் கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மகனை பறிகொடுத்து விட்டு இப்போது கதறி கொண்டிருக்கிறார் பூவரசி... தீதும் நன்றும் பிறர் தர வாரா.!!!

    English Summary

    Koyambedu Poovarasi Left Home.. What Happened Next? A Shocking Illicit Love Story in Chennai