எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி!

  • சென்னை: முதலமைச்சராக பதவியேற்ற விஜய், முக ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்திக்காதது சர்ச்சையானது. இந்நிலையில், எடப்பாடியை சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்கவில்லை என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியிருந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் விஜய் சந்திப்பதாக, நேரம் கேட்டதாக சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்தது முற்றிலும் தவறானது எனவும், எந்த சூழலிலும் விஜய்யோ, அவருடைய அலுவலகத்திலிருந்தோ இபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்கவில்லை என கூறியுள்ளார் கேபி முனுசாமி.

    Advertisement

    ஒசூரில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," எடப்பாடி பழனிசாமியை முதல்வர் விஜய் சந்திப்பதாக, நேரம் கேட்டதாக சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். ஆனால் இபிஎஸ் அலுவலகத்தை தொடர்புக்கொள்ளவில்லை.

    Advertisement

    மாறாக வேறு தலைவர்களை கேட்டதாக சொல்வது முற்றிலும் தவறானது. எந்த சூழலிலும் விஜய், அவருடைய அலுவலகத்திலிருந்தோ இபிஎஸ் சந்திக்க நேரம் கேட்கவில்லை. தமிழக முதல்வர் ரீல்ஸ் விட்டு, இன்ஸ்டாகிராமில் சினிமா போல உணர்ச்சிகளை தூண்டி இளைஞர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்..

    கேபி முனுசாமி

    மாயத்தோற்றத்தை உருவாக்கி, தன் பெற்றோரையும் விஜய்க்கு வாக்களிக்க வேண்டுமென வற்புறுத்தியதால் வெற்றி பெற்றுள்ளார்.. விஜய் வெற்றி இந்த சமூகத்திற்கு செய்த தியாகத்திற்கோ, உழைப்பிற்கோ கிடைத்ததல்ல, குறிப்பிட்ட சதவிகிதம் மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். எந்தக்கட்சியும் தீர்ந்து போகாது, கம்யூனிஸ்ட் ஆட்சிக்கே வர முடியாது என்றாலும் கொள்கையை முன்நிறுத்தி இருப்பார்கள் விஜய் பார்த்து படிப்பவர், அவரிடம் சரக்கு இல்லை.

    Advertisement

    ஆதவ் அர்ஜுனா

    31 ஆண்டுகால ஆட்சியில் இருந்த இயக்கம், தேசிய கட்சிகள் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்ட அதிமுக தனித்துவத்தை எப்படி இழக்கும், எம்ஜிஆர், அம்மாவை விமர்சிக்காதவர் பெரும்பான்மை இல்லை என்றால் விஜய் யாரை சந்தித்திருக்க வேண்டும்.? நிர்மல் குமாரை விட ஆதவ் சந்தர்பவாதி, அதிகாரம் உள்ள இடத்திற்கு சென்றுவிடுவார். நாங்கள் மறைந்தால் அதிமுக கொடி போடுவார்கள்.

    திருமாவளவன்

    ஆதவ் மறைந்தால் எத்தனை கட்சி போர்த்துவது.? அவர் பேட்டியளிக்க தகுதியானவர் அல்ல. விசிக தலைவர் திருமாவளவன், கீழுந்திருந்து வளர்ந்த போராளி, அவரின் மனம் எவ்வளவு புண்பண்டிருக்கும் திமுக தலைவரை மனதார ஏற்று 11 ஆண்டுகள் தொடர்ந்து கூட்டணியில் இருந்தார்.. திமுக தலைவர்களை அன்போடு, முக மலர்ச்சியோடு சந்தித்திருப்பார்.

    Advertisement

    விஜய்

    சினிமா பாணியில் பேசுவதால் முன்னாடி உள்ளவர்கள் கை தட்டலாம், முகம் சுழிப்பவர்கள் எத்தனை பேர் என்பதை உணர வேண்டும், உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் மாநில முதல்வர். தவெகவிற்கு கட்சி அமைப்பே இல்லையே, அதிமுக குக்கிராமங்களில் கிளை உள்ளது.. உங்களுக்கு எங்கு இருக்கிறார்.. இன்ஸ்டா கம்பியூட்டர் என இருக்கிறார்.. மனிதனுக்கு கொள்கை, சிந்தனை உள்ளது.. உங்களிடம் இருப்பவர் எத்தனை நாள் இருப்பார் என தெரியாது.

    அதிமுக

    ஒரு விநாடி மாறினால் என்ன நடக்கும், முதல்வர் பாசத்தோடு இருக்க வேண்டும். இடைத்தேர்தல் வரட்டும் எப்படி இருக்கும் என பாருங்கள். எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் அதிமுக. காப்பாற்றியவர் அம்மா, அவர் வழியில் இபிஎஸ் உழைக்கிறார். போதை பொருட்களை ஒழிப்பேன், சிங்கப்பெண் என்றால் எத்தனை அலுவலகம் திறந்தீர்கள், நிதி ஒதுக்கியது எவ்வளவு, தனி திறனை எப்போது கற்பிப்பீர்கள், கஞ்சா விற்றவனை காட்டிக்கொடுத்தால் கொலை செய்கிறார்கள்.. கடுமையான உத்தரவு போட்டு நடவடிக்கை எடுத்தால் தடுக்க முடியும்" என்றார்.

    English Summary

    KP Munusamy denies Vijay sought appointment with EPS and launches sharp attack on TVK leadership and Aadhav Arjuna.