ஸ்டாலின் - ராகுல் காந்தி சந்திக்காதது ஏன்? கனிமொழியிடம் கூறியது என்ன? சீக்ரெட் பகிர்ந்த கேஎஸ் அழகிரி

  • சென்னை: தேர்தலுக்கு முன்பே திமுக - காங்கிரஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கேஎஸ் அழகிரி கூறியுள்ளார். ராகுல் காந்தி - ஸ்டாலின் இடையே மனக்கசப்பு ஏற்பட கரணம் என்ன என்பது பற்றியும் கேஎஸ் அழகிரி பேசியுள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி உடனடியாக தவெக பக்கம் தாவியது. திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக கூட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சந்திக்கவில்லை, கூட்டணியில் வெற்றி பெற்றுவிட்டு அடுத்த நொடியே காங்கிரஸ் தவெகவுடன் சென்றுவிட்டதாக திமுக விமர்சித்த வந்தது.

    Advertisement

    கே எஸ் அழகிரி பேட்டி

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கேஎஸ் அழகிரி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசும் போது, அதிகாரத்தில் பங்கு என்பதை பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டார். அவர்களும் சென்னையில் சொல்லிவிட்டார்கள். அதன்பிறகு திமுகவில் இருந்து சோனியாவிடம் தனிப்பட்ட முறையில் பேசினர்.

    அதன்பிறகு சோனியா காந்தி, திடீரென்று அவர்களிடம் இப்போது கேட்க வேண்டாம் என்று ஏதோ பாணியில் சொல்லிவிட்டார்கள். அதன்பிறகு அம்மா (சோனியா காந்தி) சொல்லிவிட்டார். இதில் மாற்று கருத்து வேண்டாம் என்றுதான் ராகுல் காந்தி அதில் இருந்து விலகிக்கொண்டார். ராகுல் காந்திக்கு விஜய்யுடன் செல்ல வேண்டும் என்பது இல்லை. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதுதான். புதுவையில் காலையில் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார்.

    Advertisement

    அப்போதே கசந்துவிட்டது

    அதே தெருவில் நான்கு மணி நேரம் கழித்து ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இரண்டும் வேறு வேரு பிரசாரம்.. அப்போதே கசந்துவிட்டது" என்று கூறினார். சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைவதில் பெரும் இழுபறி ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் திமுக தலைமை ஒதுக்கியது. கூட்டணி அமைந்த போதிலும் திமுக - காங்கிரஸ் இடையே அதற்கு முன்பு இருந்த இணக்கம் தென்படவில்லை.

    குறிப்பாக ராகுல் காந்தி - ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு எட்டப்பட்ட பிறகும் ராகுல் காந்தி - ஸ்டாலின் ஒருவொருக்கொருவர் பேசிக்கொள்லவில்லை. பல்வேறு மனக்கசப்புகளுக்க்கு மத்தியில் தேர்தலை சந்தித்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவியது. தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக வென்ற தவெகவிற்கு அன்று இரவே ராகுல் காந்தி வாழ்த்து கூறினார்.

    Advertisement

    தவெகவுடன் கூட்டணி தொடரும்

    விஜய்யை தனிப்பட்ட முறையில் செல்போனில் பேசி ராகுல் காந்தி வாழ்த்து கூறிய நிலையில், ராகுல் காந்தியிடம் அப்போதே விஜய் உங்கள் ஆதரவு தேவைப்படும் என்று வலியுறுத்தியிருந்தார். கட்சியினருடன் கலந்து பேசி முடிவு சொல்வதாக ராகுல் காந்தி கூறிய நிலையில் ஓரிரு நாட்களில் தவெகவுடன் காங்கிரஸ் கை கோர்த்தது.

    தவெக அமைச்சரவையில் 2 அமைச்சர் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டது. வருகின்ற உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்துவிட்டது. அதன்பிறகில் இருந்தே காங்கிரஸ் - திமுக இடையே கருத்து யுத்தம் நடைபெற்று வருகிறது.

    English Summary

    KS Alagiri, Senior Congress leader, has stated that a rift had developed between the DMK and the Congress even before the election. He also spoke about the reasons behind the friction between Rahul Gandhi and MK Stalin.