மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்!

  • சென்னை: திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிருஷ்டமாம். மானம், வெட்கம், ரோசம் இருந்திருந்தால் அப்பொழுதே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று கூறிவிட்டு, கூட்டணியை விட்டு வெளியே வந்து தொலைச்சுருக்கலாமே என துரை வைகோவை முன்னாள் திமுக நிர்வாகி கே எஸ் ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ உள்ளிட்டோர் தற்போது விஜய்க்கு ஆதரவாக செயல்படுவது அவர்களின் அரசியல் சந்தர்ப்பவாதத்தை காட்டுகிறது. இதுகுறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன். ஆனால் என் கருத்து கேட்கப்படவில்லை. அதன் விளைவுகளை தற்போது அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றும் கே.எஸ். ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். நேற்று திருச்சி வந்த முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிருஷ்டவசமானது என பேசியிருந்தார்.

    Advertisement

    2026 சட்டசபை தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் களத்தை முற்றிலுமாக மாற்றிப் போட்டுள்ளது. விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தவெக அரசுடன் நெருக்கம் காட்டி வருகின்றன. அந்த வகையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக, அண்மைக்காலமாக தவெக அரசுக்கு ஆதரவான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

    தனி சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால்..

    முதல்வர் பதவியேற்ற உடன் விஜய் ஸ்டாலின், வைகோ, அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்தார். குறிப்பாக மதிமுக பொதுச்செயலாளரை அவரது இல்லத்தில் விஜய் சந்தித்த போது வைகோ மிகுந்த உற்சாகத்தில் காணப்பட்டார். அதோடு வீட்டில் உள்ள பணிப்பெண்களையும் விஜய்யிடம் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பினையும் மதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்தது அரசியலில் கவனத்தை ஈர்த்தது.

    Advertisement

    அதேபோல், நேற்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக சென்ற முதல்வர் விஜய்யை, திருச்சி தொகுதி எம்பியும் வைகோவின் மகனுமான துரை வைகோ விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது. தனி சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் தவெகவுக்கு ஆதரவு அளித்திருக்கலாம்" என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

    மானம், வெட்கம், ரோசம் இருந்திருந்தால்

    "உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம் என கூறுபவர்கள், அப்போதே கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கலாம். இன்று இப்படி பேசுவது அரசியல் நாகரிகத்திற்கு பொருத்தமல்ல" என்று முன்னாள் திமுக நிர்வாகி கே.எஸ். ராதாகிருஷ்ணன் துரை வைகோவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிருஷ்டமாம். மானம் வெட்கம் ரோசம் இருந்திருந்தால் அப்பொழுதே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று கூறிவிட்டு, கூட்டணியை விட்டு வெளியே வந்து தொலைச்சுருக்கலாமே.. இந்நேரம் திமுக வெற்றி பெற்றிருந்தால் இவர் இப்படி பேட்டி கொடுத்திருப்பாரா.. வைகோ அவர்களுக்காவது நீண்ட அரசியல் பாரம்பரியம் பின்புலம் இருக்கிறது. தந்தையின் புகழில் குளிர் காயும் அவரின் மகன் போன்றவர்கள் வாய்த்துடுக்கோடு பேசுவது நல்லதல்ல..

    அழிந்துபோன உங்க கட்சிக்கு உயிர்‌கொடுத்தவர்

    ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தன்னுடைய தொகுதிக்கு வருகை புரிந்த முதல்வரை வரவேற்று பொன்னாடை அணிவித்தது அரசியல் நாகரீகம். நடைமுறை என்று கூட சொல்லலாம். ஆனால் நாங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிடாமல்‌ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டோம், ஆகவே த.வெ.க.விற்கு ஆதரவு அளிக்க முடியவில்லையே என்று வருந்துகிறோம் என்று பேட்டி கொடுப்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை.

    Advertisement

    தி.மு.க.வைப் பற்றியும், கலைஞரைப் பற்றியும், ஸ்டாலின் அவர்களைப் பற்றியும், உங்கள் தந்தை வைகோ பேசாத பேச்சா. அத்தனை ஏச்சு பேச்சுக்களையும் மறப்போம், மன்னிப்போம் என்று புறந்தள்ளி விட்டு முற்றாக அழிந்து போன உங்கள் கட்சிக்கு உயிர்‌கொடுத்தவர் திமுக என்பதை மறந்து விடாதீர்கள். பணத்திற்கும் பதவிக்கும் நேரத்திற்கு தக்க வேஷம் போடுபவர்களை காலம் புறந்தள்ளும். நாளை தமிழக அரசியல் வரலாறு எழுதப்படும் போது வருகிற இளம் தலைமுறை‌ உங்களை எள்ளி நகையாடும்" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    நான் முன்பே எச்சரித்திருந்தேன்

    மற்றொரு பதிவில், "வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ உள்ளிட்டோர் தற்போது விஜய்க்கு ஆதரவாக செயல்படுவது அவர்களின் அரசியல் சந்தர்ப்பவாதத்தை காட்டுகிறது. இதுகுறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன். ஆனால் என் கருத்து கேட்கப்படவில்லை. அதன் விளைவுகளை தற்போது அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றும் கே.எஸ். ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். அவரது இந்த கருத்துகள், திமுக - மதிமுக உறவு மற்றும் எதிர்கால கூட்டணி அரசியல் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

    Advertisement

    இப்படி அடுத்தடுத்து தவெகவுக்கு ஆதரவாக மதிமுக பேசி வருவதால், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைக்க போவதாக பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தன. ஆனால் இதனை வைகோ மறுத்துள்ளார். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டோம் எனவும், வரும் 27 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம் என்றும் விளக்கம் அளித்தார்.

    English Summary

    KS Radhakrishnan, Former DMK leader criticized Durai Vaiko and MDMK’s recent political stance, alleging opportunistic support for Vijay-led TVK. He claimed he had warned DMK leadership earlier and said current developments validate his concerns about the party’s alliance decisions.