வாட்ஸ்அப்-லேயே இனிமேல் பஸ் டிக்கெட் வாங்கலாம்! KSRTC-யின் சூப்பர் அறிவிப்பு! இன்று முதல் சேவை

  • சென்னை: கேரள மாநில அரசு, பொதுப் போக்குவரத்து சேவைகளில் இதுவரை பார்த்திராத ஒரு புரட்சியை ஏற்படுத்த போகிறது. ஆம், தினந்தோறும் பஸ் ஸ்டாண்டுகளில் மணிக்கணக்கில் காத்துக் கிடந்து, நீண்ட வரிசையில் நின்றபடி டிக்கெட் வாங்கும் பயணிகளின் சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒரு சூப்ரான திட்டத்தை கேரள மாநில போக்குவரத்துக் கழகம் (KSRTC) தயார் செய்துள்ளது. அதன்படி, பயணிகள் தங்களது செல்போனிலுள்ள வாட்ஸ்அப் ஆப் மூலமாகவே எளிதாக பஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது..!!

    Advertisement

    தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக, அதிநவீனத் தொழில்நுட்பத்தின் உதவியோடு இயங்கும் வாட்ஸ்அப் தானியங்கி முறையை KSRTC இன்று அறிமுகப்படுத்துகிறது. இதிலுள்ள வசதிகள் என்னென்ன தெரியுமா?

    Advertisement

    பயணிகள் தங்களுக்கு தேவையான பயண விவரங்களை வாட்ஸ்அப்பில் கேட்டறியும்போது, அது உடனடியாகப புரிந்துகொண்டு சுடச்சுடப் பதிலளிக்குமாம்.

    பஸ் டிக்கெட் சேவை

    அதேபோல இதில் இன்னொரு சுவாரசியமான ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், பயணிகள் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் மட்டுமல்லாமல், ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு மலையாள சொற்களை டைப் செய்யும் 'மேங்கிலிஷ்' முறையிலும் உரையாடி சுலபமாகத் தங்களது சீட் வசதிகளை உறுதி செய்துகொள்ள முடியும்.

    இன்று இதற்காகவே திருவனந்தபுரத்தில் விழா நடைபெற போகிறது.. இந்த விழாவில், கேரள மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சல்ர சி.பி. ஜான் இந்த நவீன வாட்ஸ்அப் சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து, அதற்கான பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணையும் வெளியிட உள்ளார்.

    Advertisement

    இன்று முதல் சேவை

    இதன் மூலம் பயணிகள் வாட்ஸ்அப் தளத்திலேயே ஒருங்கிணைக்கப்பட்டுள்ள UPI, கடன் அட்டை மற்றும் இணைய வங்கிச் சேவைகள் வழியாக நொடியில் கட்டணத்தை முடித்து டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.. அதுமட்டுமல்ல, தங்களது பஸ், தற்சமயம் எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறது என்பதை நேரலையிலேயே கண்காணிக்கும் "லைவ் ட்ராக்கிங்" வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாக, பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி எண்ணாக 149 என்ற புதிய கஸ்டமர் சேவை மையமும் இன்று பயன்பாட்டிற்கு வருகிறது. மேலும், மாநிலம் முழுவதும் பார்சல்களை விரைவாக அனுப்பும் பொருட்டு முழுமையாக மேம்படுத்தப்பட்ட KSRTC கூரியர் சேவையும் இதே மேடையில் தொடங்கப்படவுள்ளது.

    Advertisement

    KSRTC-யின் சூப்பர் அறிவிப்பு

    பயணிகள் தேவையைப் பூர்த்தி செய்ய, MLA நிதி மற்றும் தனியார் நிதியுதவி மூலமாகப் புதிய பேருந்துகளை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த அடுத்தடுத்த அதிரடி முடிவுகள், போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய வரலாற்று சாதனையைப் படைக்கவுள்ளன.. இதெல்லாமே பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகின்றன...!!

    தென்னிந்தியாவிலேயே முதன்முறையாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம், பயணிகள் இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை,. தங்களின் செல்போனில் இருந்தபடியே மிக எளிதாகவும் விரைவாகவும் பயணச் சீட்டுகளைப் பெற முடியும்.

    டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும், பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும் தொடங்கப்பட்டுள்ள இந்த அதிரடித் திட்டம், பொதுமக்கள் மற்றும் தினசரி பயணிகளிடையே பெரும் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது...!!

    English Summary

    KSRTC Launches WhatsApp Bus Ticket Booking Service From Today in Kerala