கூடுவாஞ்சேரி பெண்ணுக்கு இப்படியொரு கொடூரமா? சூட்கேஸில் முண்டம்.. அண்டாவில் ரத்தக்கறை! சென்னை பகீர்

  • சென்னை: சென்னையை உலுக்கிய ஒரு கொடூரமான கொலையின் அதிர்ச்சியும், பரபரப்பும் இன்னமும் நீங்கவில்லை.. கூடுவாஞ்சேரி பெண்ணின் இந்த நிலைமைக்கு என்ன காரணம்? டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அந்தச் சிவப்பு நிற டிராலி சூட்கேஸ் யாருடையது? என்ற குழப்பம் நீடிக்கிறது.. தலை மற்றும் கைகள் இல்லாமல், பெண்ணின் சதை பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி அண்டாவில் போட்டு சமைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.

    Advertisement

    ஒடிசாவை சேர்ந்த 38 வயது பெண் ஹயத்துன்நிஷா.. சென்னையை சேர்ந்த ஜகுர்கான் என்பவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசாவில் திருமணம் செய்துவிட்டு, சென்னைக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு யூசுப்கான் (19) என்ற மகன் உள்ளார்.

    Advertisement

    சென்னை கூடுவாஞ்சேரி

    தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 வருடங்களுக்கு முன்பே பிரிந்து கூடுவாஞ்சேரி அடுத்துள்ள மாடம்பாக்கம் பகுதியில் மகனுடன் தங்கியிருந்தார் ஹயத்துன்நிஷா.

    இந்நிலையில் ஹயத்துன்நிஷா, தனது மகனிடம், "ராகுல் என்பவரை காதலித்து வருகிறேன், அவரை திருமணம் செய்து கொள்ள போகிறேன்" என்றும் சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு கோபமடைந்த மகன், பெருங்களத்தூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து சென்று விட்டார்.. இதனால் ஹயத்துன்நிஷாவும் தங்கியிருந்த வீட்டை காலி செய்து விட்டு, கூடுவாஞ்சேரி மசூதி அருகில் உள்ள முகமதுரபி வீட்டில் வாடகைக்கு தங்கினார்.

    வாடகை வீட்டில் 2 பேர்

    இப்படிப்பட்ட சூழலில், சில தினங்களுக்கு முன்பு, ஹயத்துன்நிஷாவின் வீட்டிற்கு, கண்ணாடி போட்டிருந்த இளம் பெண்ணும், குறுந்தாடி வைத்திருந்த இளைஞரும் வந்துள்ளனர்.. உடனே ஹவுஸ்ஓனர் ஹயத்துன்நிஷாவிடம், அவர்கள் 2 பேரும் யார்? என்று கேட்டதற்கு, அவர்கள் என்னுடைய தம்பியும், அவரது மனைவியும் என்று பதிலளித்தாராம் ஹயத்துன்நிஷா.

    Advertisement

    இதையடுத்து 2 வாரமாக அந்த ஜோடியும் ஹயத்துன்நிஷா வீட்டிலேயே தங்கியிருந்தது.. பிறகு திடீரென அந்த ஜோடி மட்டும் வீட்டை பூட்டி விட்டு கிளம்பியது.. அப்போது ஹவுஸ் ஓனர், ஹயத்துன்நிஷா எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், "என் அப்பா இறந்துவிட்டார், அதனால் அக்கா ஹயத்துன்நிஷா முதலில் சென்றுவிட்டார். நாங்கள் இப்போது கிளம்புகிறோம். ஊரிலிருந்து திரும்பி வந்ததுமே வாடகை தந்துவிடுகிறோம்" என்று சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.

    அண்டாவில் ரத்தக்கறை

    இதற்கு பிறகுதான், ஆக்ரா சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. ஆக்ரா ரயில் நிலையத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், அன்ரிசர்வ்டு பெட்டியில், சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. அங்கிருந்த போலீசார், சிவப்பு நிற டிராலி சூட்கேஸை திறந்து பார்த்தபோது, தலை, கைகள் இல்லாத பெண்ணின் சடலம் துண்டு, துண்டாக வெட்டி 2 கவரில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    Advertisement

    இதையடுத்து உடல் பாகங்களை கைப்பற்றி போலீசார் விசாரித்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்ணாடி போட்டிருந்த இளம் பெண்ணும், குறுந்தாடி வைத்திருந்த இளைஞரும் சூட்கேஸை வைத்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் 2 பேரும் கூடுவாஞ்சேரி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்ட்ரலுக்கு எலக்ட்ரிக் ரயிலில் சூட்கேசுடன் பயணித்ததும் தெரியவந்தது.

    சூட்கேஸில் முண்டம்

    இதனால் போலீசார், கூடுவாஞ்சேரியில் ஹயத்துன்நிஷா தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு சென்றார்கள்.. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார்கள்.. அங்கே பிரியாணி செய்ய பயன்படுத்தும் பெரிய அண்டாவில் ரத்தக் கறைகளும், மேல் மூடியில் மைதா மாவும் பூசப்பட்டிருந்ததை பார்த்த காக்கி சட்டைகள் தலைசுற்றி போனார்கள்.. ஹயத்துன்நிஷாவை அந்த தம்பதி, துண்டு துண்டாக வெட்டியதோடு மட்டுமல்லாமல், அவரது உடலின் சில பகுதிகளைச் சமைத்தது தெரியவந்துள்ளது.

    Advertisement

    ஆனால், சூட்கேசில் உடலின் முண்டம் மட்டுமே இருந்துள்ளது. எனவே தலையை அடையாளம் தெரியாத அளவுக்குச் சுக்குநூறாக சிதைத்து ரயிலில் இருந்து தண்டவாளத்தில் வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

    பெண்ணின் தலை எங்கே

    எங்கு தேடியும் தலை மற்றும் கைகள் சிக்காததால், தனிப்படை போலீசார் ஆக்ராவிலிருந்து சென்னை வரை உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு பறந்த தனிப்படைகள், அங்குள்ள கொலையாளிகளின் உறவினர்களின் உதவியோடு அந்தத் தம்பதி பதுங்கியிருக்கும் ரகசிய இடத்தைக் குறிவைத்துள்ளன.

    ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட செல்போனும், தலைமறைவான அந்தத் தம்பதியின் மர்மமான முகமும் போலீசாரைத் திணறடித்து வருகிறது. காதலுக்காக நடந்த கொலையா அல்லது பழிவாங்கும் படலமா? தலைமறைவாக இருக்கும் அந்த ஜோடி சிக்கினால் மட்டுமே இந்த கொடூரத்தின் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

    English Summary

    Kuduvanchery Woman’s Shocking Murder.. Torso Found in Chennai Suitcase, Bloodstains in Cooking Pot