அக்., 11ல் தொடங்கும் குலசை தசரா.. ஏற்பாடுகள் தீவிரம்.. கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர்கள்

  • தூத்துக்குடி: உலக புகழ்பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழா வருகிற 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் ஆலய திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    Advertisement

    இந்தியாவில் மைசூருவுக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா உலக புகழ்பெற்றதாகும்.

    Advertisement

    இந்த ஆண்டு குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் ஆலய தசரா திருவிழா வருகிற 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

    குலசை தசரா விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கி உள்ளனர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நிகழ்ச்சி வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. கொடியேற்றம் துவங்கி ஒன்பது நாட்களும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருவார்கள்.

    குலசேகரப்பட்டினம் ஏவுதளம்.. தனியாருக்கு ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்!?

    இதைத்தொடர்ந்து, இன்று குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சித்தலைவர் விஷீ மகாஜன் ஆகியோர் முத்தாரம்மன் ஆலயத்தில் திருவிழா முன்னேற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள், பக்தர்களுக்கு வசதிக்காக செய்யப்பட்டுள்ள பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    Advertisement

    கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பக்தர்கள் கூடும் பகுதி மற்றும் வெளியேறும் பகுதி ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர் இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் குலசேகரப்பட்டணம் தசரா திருவிழா தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்திலும் அமைச்சர்கள் கலந்து கொண்டு ஆய்வு நடத்துகின்றனர்.

    English Summary

    Kulasai Dasara: With the world-renowned festival at the Kulasekarapattinam Mutharamman Temple set to begin on the 11th with the flag-hoisting ceremony, Minister for Hindu Religious and Charitable Endowments Ramesh and Minister for Fisheries Srinath inspected the preparatory arrangements for the event.