விஜய்க்கு புது தலைவலி! கூட்டணிக்குள் வெடித்த சலசலப்பு.. காங்கிரஸ் அமைச்சர் போர்க்கொடி!

  • சென்னை: குமரி அணுக்கனிம சுரங்க கால நீட்டிப்புக்கு திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இப்படி இருக்கையில் தற்போது தவெக கூட்டணியில் இருந்த காங்கிரஸும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

    Advertisement

    தமிழக அரசு வழங்கிய குமரி அணுக்கனிம சுரங்க கால நீட்டிப்பு அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று, காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், முதலமைச்சர் விஜய்யை சந்தித்து நேரில் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சிகளை தாண்டி, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே இந்த எதிர்ப்பை முன்வைத்திருப்பது தவெக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    பொதுவாக ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்துக்கொள்கிறவர்கள், அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி பேசுவதுதான் வழக்கம். ஆனால், தவெக ஆட்சியில் பங்கெடுத்திருக்கும் காங்கிரஸ், தவெகவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

    என்ன திட்டம்?

    அரிய வகை கனிமங்களின் தேவை அணு சக்தி துறையில் அதிகமாக இருக்கிறது. உள்நாட்டிலேயே இந்த கனிமங்களை வெட்டி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரையில் கனிமங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்த கடற்கரை மணலில், யுரேனியம், தோரியம், இலாமினைட், மோனசைட் அதிக அளவில் இருக்கிறது. பிரச்சனை என்னவெனில், மோனசைட்தான் இதில் ரொம்பவும் டேஞ்சர். இது இயற்கையில் கதிரியக்கம் கொண்டது.

    Advertisement

    மக்களின் அச்சம்

    மணலில் இருந்து இதை தோண்டி வெளியே எடுக்கும்போது அந்த பகுதியில் கதிரியக்கம் பரவும் அபாயம் ஏற்படும் என்று மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர். மட்டுமல்லாது மண் எடுக்கிறோம் என்று சொல்லி.. கடற்கரையை மொத்தமாக வழித்து எடுத்துச் செல்வதாகவும், இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் வந்துவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

    அனுமதி கொடுத்த தமிழக அரசு

    எனவே கனிம சுரங்க திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். நிலைமை இப்படி இருக்கையில் கனிம சுரங்கத்திற்கான காலக்கெடு நிறைவடையும் கடைசி நாளில், மேலும் ஓராண்டுக்கு அனுமதி வழங்கியிருந்தது தமிழக அரசு.

    Advertisement

    தவெக கட்சி தொடங்கியபோது, இந்த கனிம சுரங்கத்திற்கு எதிராக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, வந்த பின்னர் ஆதரிப்பதா? என்று திமுக எம்பி கனிமொழி உட்பட பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

    அமைச்சர் எதிர்ப்பு

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். முதலமைச்சரும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

    English Summary

    Kumari Atomic Mineral Mining: The DMK had strongly opposed the extension of the lease for the atomic mineral mining operations in Kumari. Against this backdrop, the Congress—which is part of the TVK alliance—has now also expressed its opposition.