L Murugan: மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக எல் முருகன் திடீர் அறிவிப்பு.. எம்பி பதவிக்கும் முழுக்கு

  • சென்னை: மத்திய இணை அமைச்சராக பதவி வகித்த எல். முருகன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக 4 பக்க கடிதத்தினை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார். அதில், முதலில் நாடு, பிறகு கட்சி, கடைசியில் தான் எனது நலன் என்றும், கட்சியை பலப்படுத்த, முழு நேர அரசியலில் ஈடுபடவும், 2029 தேர்தலில் பாஜக வெற்றி பெற உழைப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

    Advertisement

    மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார் எ. முருகன்.

    Advertisement

    ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

    எல் முருகன் எழுதிய கடிதத்தில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாரத மாதாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் சேவையாற்றியது என் வாழ்வின் மிகப்பெரிய பெருமையாகும். மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து விலகி மீண்டும் முழு நேர கட்சி பணிக்கு திரும்புகிறேன்.

    தினக்கூலி தொழிலாளரின் மகனாக பிறந்து பிரதமர் மோடி அமைச்சரவையில் பணியாற்றியது என் வாழ்வின் ஆகச்சிறந்த பாக்கியம். 2029 மக்களவை தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த தொண்டர்களுடன் இணைந்து களப்பணியாற்ற விரும்புகிறேன்.

    திருச்சி பெண் அரசு ஊழியரை மிரட்டிய பாஜக நிர்வாகி.. கைது செய்ய தயங்குவது ஏன்? அரசு ஊழியர்கள் கேள்வி
    Advertisement

    முதலில் நாடு, பிறகு கட்சி, கடைசியில்தான் எனது நலன். பிரதமர் மோடியின் தமிழக வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சராக பணியாற்ற எனக்கு வய்ப்பு வழங்கிய பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியை வலுப்படுத்த முழு நேர பணியில் ஈடுபட ராஜினமா முடிவு எடுத்துள்ளேன். கிராமம் கிராமமாக தெருதெருவாக சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.


    மோடிக்கு 5 பக்க கடிதம்

    முதலில் நாடு, பிறகு கட்சி, கடைசியில்தான் எனது நலன். பிரதமர் மோடியின் தமிழக வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சராக பணியாற்ற எனக்கு வய்ப்பு வழங்கிய பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியை வலுப்படுத்த முழு நேர பணியில் ஈடுபட ராஜினமா முடிவு எடுத்துள்ளேன். கிராமம் கிராமமாக தெரு தெருவாக சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.

    Advertisement
    விஜய் லண்டன் பயணம்: யாரை சந்தித்தார்? எவ்வளவு முதலீடு வரும்? வெளிப்படையாக பதில் கேட்கும் எல் முருகன்

    எல் முருகனின் இந்த அறிவிப்பு சற்றும் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி தமிழக வருகையின் போது அவருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். இந்த நிலையில், திடீர் திருப்பமாக தனது பதவி விலகல் கடிதத்தை எல். முருகன் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார். 5 பக்கங்கள் கொண்ட கடிதத்தை எல். முருகன், பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார்.

    மத்திய இணை அமைச்சர் பதவி

    தமிழக பாஜக தலைவராக 2020 மார்ச் முதல் 2021 ஜூலை வரை பதவி வகித்தார். 2021-ல் எல் முருகனுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார் 2024 லோக்சபா தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட எல் முருகன் தோல்வியை தழுவினார். எனினும், மாநிலங்களவை எம்பியாக நியமனம் செய்யப்பட்ட எல் முருகனுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    Advertisement

    மத்திய அமைச்சரவை மாற்றப்படுகிறதா?

    சுமார் 2 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்த எல் முருகன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். வரும் 2029 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜகவை வலுப்படுத்தும் விதமாக அவர் தனது ராஜினமா செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட இருப்பதாக தகவல் வரும் நிலையில், எல் முருகன் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். எல். முருகனுக்கு மாற்றாக தமிழகத்தை சேர்ந்த வேறு யாருக்காவது மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதா? என்ற எதிர்பார்ப்பும் தமிழக பாஜகவினர் இடையே ஏற்பட்டுள்ளது.

    English Summary

    L Murugan, who served as a Union Minister of State, has announced his resignation. He has sent a four-page letter to Prime Minister Modi regarding this decision. In the letter, he stated that his priorities are "Nation first, Party next, and Self last." He explained that he took this decision to strengthen the party, engage in full-time politics, and work towards a BJP victory in the 2029 elections.