சென்னை: தவெக அரசின் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மீது அவரது சொந்த ஊரைச் சேர்ந்த நபர் நில அபகரிப்பு புகார் அளித்துள்ளார். சிடிஆர் நிர்மல்குமார் பாஜகவில் இருந்தபோதும், அதிமுகவில் இருந்த போதும் அவரது சொந்த ஊரில் நிறைய முறைகேடு செய்து நிலத்தை அபகரிப்பு செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் அவரது தந்தை மீது அவரது சொந்த ஊரான நடுமுதலைக்குளத்தைச் சேர்ந்த உக்ரபாண்டியன் என்பவர் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நில அபகரிப்பு புகாரை கொடுத்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள தவெக அரசின் மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது அவரது சொந்த ஊரைச் சேர்ந்த நபர் ஒருவர் நில அபகரிப்பு புகார் அளித்துள்ளார். அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் முன்பு பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்தபோது, அவரது சொந்த ஊரில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுப் பலரது நிலங்களை ஆக்கிரமித்து அபகரித்துக் கொண்டதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழக அரசியலில் தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க திமுக தரப்பில் ரூ. 50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்தச் சூழலில், தற்போது அவர் மீது இந்த நில அபகரிப்புப் புகார் கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.