விஜய்க்கு லேட்டஸ்ட்டாக வந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. பெங்களூரு கிளம்பறாரா? இதென்ன திடீர் திருப்பம்?

  • சென்னை: கர்நாடக முதல்வரை காவிரி பிரச்சனை தொடர்பாக நேரில் சந்தித்து பேச, தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளன.. ஆனால், இந்த சந்திப்பை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான் நமக்கு ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் கிடைத்துள்ளது.

    Advertisement

    காவிரி நதியின் அருகே கர்நாடக அரசு மேகேதாட்டு எனும் இடத்தில் அணைக் கட்டுதல், காவிரி நீரை முறைப்படி திறந்து விட மறுத்தல் உள்ளிட்ட சிக்கல்களுக்கு தீர்வு கணும் பொறுட்டு கர்நாடக முதல்வர் சிவக்குமாரை சந்திக்க ஆகஸ்ட் 3தேதி பெங்களூர் செல்ல முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்தார். அதாவது, சிவக்குமாரின் அழைப்பை ஏற்று கர்நாடகாவுக்கு விஜய் பயணப்படுவதாக சொல்லப்பட்டது.

    Advertisement

    கர்நாடகா காவிரி பிரச்சனை

    1980-களில் நிலவிய கடுமையான வறட்சியின்போது அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்கு தேவையான தண்ணீரைப் பெற்றார். அந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக முதல்வர் ஒருவர் நேரடியாக கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த போவதாக கூறப்பட்டது, அரசியல் கவனத்தையும் பெற்றது.

    ஆனால் விஜய்யின் இந்த பயணத்திற்குத் தமிழகத்தில் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்புகள் கிளம்பின. கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து பேசுவதால் காவிரிப் பிரச்சினையில் எந்த தீர்வும் கிடைக்காது என்றும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிப்பதுதான் இப்போதைய தேவை என்றும் சொல்லி வருகின்றன.

    Advertisement

    பெங்களூரு செல்கிறாரா விஜய்

    அத்துடன் இந்த சந்திப்பைத் தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தமிழக அரசியல் கட்சிகளையும் தாண்டி, விவசாய அமைப்புகளும் இந்த பயணத்தை எதிர்த்து வருகின்றன.

    இதற்கு நடுவில், கர்நாடகாவிலும் இந்த சந்திப்புக்கு எதிர்ப்புகள் உருவெடுத்துள்ளன.. . மாண்டியாவில் விஜய் நடித்த "ஜனநாயகன்" படம் திரையிடப்பட்ட தியேட்டரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கன்னட அமைப்பினர் கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இதனால் கர்நாடகா - தமிழக எல்லையில் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

    Advertisement

    அன்புமணி ராமதாஸ் சொன்னது என்ன

    இப்படிப்பட்ட சூழலில்தான், நமக்கு ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் கிடைத்துள்ளது.. அதாவது, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து அதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை கர்நாடக அரசுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் அதுவரை கர்நாடகவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிருங்கள் என்றும் பாமக தலைவர் அன்புமணி, முதல்வர் விஜய்க்கு தகவல் பாஸ் பண்ணியிருக்கிறாராம்.

    அதேபோல, ஆதவ் அர்ஜுனாவிடமும் திருமாவளவன் பேசியிருக்கிறார்.. "காவிரி நதி நீர் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அதன்படி முடிவை எடுப்பது கர்நாடகாவின் வழக்கம். காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும் தங்களின் ஒற்றுமையை நிரூபிக்கின்றன. அதுபோல ஒற்றுமையை தமிழகமும் காட்டினால்தான் முதல்வருக்கு பெருமை. இதனை முதல்வரிடம் நீங்களே சொல்லுங்கள்'' என்று சொன்னாராம்.

    Advertisement

    எதிர்க்கட்சிகள் அல்லாமல் கூட்டணியில் உள்ள கட்சிகளும், இப்படி வலியுறுத்துவதால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 3-ந்தேதி பெங்களுரூக்கு விஜய் செல்வது தள்ளி வைக்கப்படலாம் என்கிறார்கள் தவெக ஆதரவு கட்சிகள்.

    உளவுத்துறை தந்த ரகசிய தகவல்

    ஒருவேளை, பெங்களூருக்கு விஜய் உறுதியாக செல்லும்பட்சத்தில், அவருக்கு கருப்பு கொடி காட்ட பெங்களூரில் சில அமைப்புகள் திட்டமிடுவதாக, உளவுத்துறை மோப்பம் பிடித்துள்ளது.. இந்த விஷயத்தை முதல்வரின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியிடமே உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

    இப்படி நாலாபக்கமும் தகவல்கள் பரபரப்பதால், பெங்களூர் பயணத்தை விஜய் ஒத்தி வைக்கலாம் என்று கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது.. ஆனால், இப்போது வரை இறுதி முடிவை விஜய் எடுக்கவில்லையாம்...!!

    Advertisement

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Latest Intelligence Report Reaches Vijay... Is He Heading to Bengaluru? What's Behind the Sudden Twist?