சென்னை: அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் நடப்பு ஆண்டில் கொலைகள் நடக்காத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தென் மாவட்டங்களில் இதுவரை 141 கொலைகள் அரங்கேறியுள்ளன. நெல்லையில் மட்டும் 47 கொலைகள் நடைபெற்றுள்ளன. இதில் 3 இரட்டை கொலைகளும் அடங்கும்.
கல்வி, பொருளாதாரம், தொழில் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் முன்னணி வகிக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. அமைதி பூங்கா என்று அறியப்படும் தமிழ்நாட்டில் சமீப காலமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. தலைநகர் சென்னையில் கொலை நடக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு குற்ற செயல்கள் அரங்கேறி வருகின்றன.
தலைநகரிலே இப்படி என்றால், தென் மாவட்டங்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 141 கொலைகள் நடைபெற்றுள்ளன. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 51 கொலைகளும், நெல்லையில் 47 கொலைகள் நடைபெற்றுள்ளன. நெல்லை மாவட்டத்தில் 3 இரட்டை கொலைகளும் இதில் அடங்கும். சேலம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் இந்த ஆண்டு 56, 49 கொலைகள் நடைபெற்றுள்ளன. தென்காசி மாவட்டத்தில் 20 கொலைகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 23 கொலைகளும் இந்த ஆண்டு நடைபெற்றுள்ளன. இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாடு மீண்டும் பழையபடி அந்த பெயரை பெற்று மக்கள் நிம்மதியாகவும், அச்சமும் இன்றி வாழ்வதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழக காவல்துறை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாக உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள தவெக, கடந்த கால ஆட்சியில் நடைபெற்ற குற்றங்களை ஊதி பெரிதாக்கி விமர்சனம் செய்து வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தங்கள் ஆட்சியில் நடைபெறும் குற்றங்களை குறைக்க முதல்வர் விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சட்டசபையில் பதிலுரையின் போது பேசிய முதல்வர் விஜய், ஒரு குற்றம் நடைபெற்றுவிட்டது என்பதற்காக மட்டுமே ஒட்டு மொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. தனிப்பட்ட குற்ற சம்பவத்திற்கும் மாநிலத்தின் ஒட்டு மொத்த சட்டம் ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு உள்ளது. காவல்துறை சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக செயல்படும். குற்றவாளிகள் மீது எந்த வித சமரசமும் இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார். முதல்வர் விஜய் இவ்வாறு கூறினாலும் சட்டம் ஒழுங்கு நிலையை சீர் செய்ய போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. காவல்துறையில் உள்ள பணியிடங்களை நிரப்பி கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும். குற்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி முன்கூட்டியே அதை தடுத்து நிறுத்த வேண்டும். இதையெல்லாம் செய்தால் மட்டுமே மக்கள் அச்சமின்றி வாழ வழி ஏற்படுத்த முடியும் என்று சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள். நடப்பு ஆண்டில் மாவட்ட வாரியாக நடந்த கொலைகள் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சென்னை - 64 தர்மபுரி - 17 தேனி- 25 திருவண்ணாமலை - 22 நெல்லை - 47
தென் மாவட்டங்களில் அதிக கொலைகள்விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
மாவட்ட வாரியாக நடந்த கொலைகள் எண்ணிக்கை
திருவள்ளூர் - 8
செங்கல்பட்டு - 9
காஞ்சீபுரம் - 16
கோவை - 32
ஈரோடு - 22
சேலம் - 56
கிருஷ்ணகிரி - 33
நாமக்கல் - 24
கடலூர் - 23
விழுப்புரம் - 26
கள்ளக்குறிச்சி - 16
நாகை -12
திண்டுக்கல் - 35
வேலூர் -26
மதுரை -62
விருதுநகர் - 49
சிவகங்கை - 22
ராமநாதபுரம் - 15
தஞ்சை - 34
புதுக்கோட்டை - 10
திருப்பத்தூர் - 16
ராணிப்பேட்டை - 10
திருப்பூர் - 26
நீலகிரி - 10
திருச்சி -35
கரூர் - 7
திருவாரூர் - 17
பெரம்பலூர் - 7
தூத்துக்குடி - 51
தென்காசி - 20
கன்னியாகுமரி - 23