கொடுமை! குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடு.. புகார் அளித்த வழக்கறிஞர் மீது தவெகவினர் தாக்குதல்

  • சென்னை: சைதாப்பேட்டை தவெக எம்எல்ஏ அருள் பிரகாசம் தலையீட்டால் நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீட்டில் சாதியப் பாகுபாடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்த வழக்கறிஞர் விக்னேஷ் மீது தவெகவினர் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சென்னை சைதாப்பேட்டை தவெக எம்எல்ஏ அருள் பிரகாசம் தலையீட்டால் நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீட்டில் சாதியப் பாகுபாடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால் குலுக்கலில் முறைகேடு செய்து பட்டியலின மக்களுக்கு தனிப் பகுதி வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    Advertisement

    திமுக ஆட்சியில் நடந்ததை போல முறையாக குலுக்கல் முறை பின்பற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கறிஞர் விக்னேஷ் பேசுகையில், மாற்றம் என்று தேர்வு செய்தார்கள். ஆனால் அது ஏமாற்றமாகவே இருக்கிறது. சைதை தொகுதியில் வீடுகள் ஒதுக்கீடு சாதி அடிப்படையில் ஒதுக்க முடியாது என்று மா.சுப்பிரமணியன் தடுத்து நிறுத்தி இருந்தார்.

    ஆனால் மா.சுப்பிரமணியன் தடுத்து நிறுத்தியதை உடைத்துவிட்டார்கள். இதன்பின் நாங்கள் பிரச்சனை செய்வோம் என்று தெரிந்த பின், குலுக்கலை தொடங்கிவிட்டார்கள். ஆனால் அந்த குலுக்கலில் A பிளாக்கில் மட்டும் சாதிய அடிப்படையில் வீடுகள் கேட்டவர்களின் எண்கள் இடம்பெறவில்லை. ஒரு வீட்டின் எண் கூட இல்லை. இதனால் C பிளாக் முழுமை அடைந்துவிட்டது.

    Advertisement

    36 வீடுகளை இப்படி சாதிய அடிப்படையில் தனியாக ஒதுக்கியுள்ளனர். மொத்தமாக ஒரு பிளாக்கையே ஒரு சமூகத்தினருக்கு ஒதுக்கி வைத்துள்ளனர். திமுக ஆட்சியில் குலுக்கல் நடந்த போது, அப்படி செய்ய முடியாது என்று கூறிவிட்டார்கள். இதனால் அப்போது ஒரு போராட்டத்தை கூட அந்த சமூகத்தினரு நடத்தினர்.

    இப்போது நடந்த குலுக்கலில் ஒரு சில வீடுகளை மட்டும் A பிளாக்கில் இருந்து கொடுத்துவிட்டு, 36 வீடுகளை ஒதுக்கி வைத்துள்ளார்கள். இதனால் முதல் தளம், 2வது தளத்தில் இருக்க வேண்டியவர்கள் இப்போது 3வது தளம், 4வது தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்தார். இந்த புகாரின் போது எம்எல்ஏ அருள் பிரகாசத்தின் பெயரை கூறியதால் வழக்கறிஞர் விக்னேஷ் மீது தவெகவினர் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Lawyer Attacked in Saidapet for Raising Voice Against Caste Discrimination in Govt Housing Allotment