தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர்

  • சென்னை: தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் இருப்பதாக நேற்று வெளியான வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ரியாஸ் அகமது என்ற வழக்கறிஞர் தன் மீது உள்ள ரூ.1.28 லட்சம் கடனுக்கான காசோலையை இன்று அமைச்சர் குமாரை சந்தித்து வழங்கினார்.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி தவெக ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் தான் நாளை சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    Advertisement

    இதையடுத்து இந்த கூட்டத்தொடரில் 2026-27 ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்பாக தமிழகத்தின் நிதி நிலைமையை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் நேற்று நிதி அமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.

    அதில், 2025-26 வரை தமிழகத்தின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளை சேர்த்தால் தமிழ்நாட்டின் மொத்த கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடியாக இருக்கிறது. அதேபோல் 2021-26 வரை 5 ஆண்டு கால கட்டத்தில் (திமுக அரசில் முதல்வராக முக ஸ்டாலின் இருந்த காலம்)ரூ.4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் ஒவ்வொரு தனி மனிதன் மீதும் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 934 கடன் உள்ளது. இது கடந்த 2020-21ம் நிதியாண்டில் தனி நபர் மீதான கடன் ரூ.67,087 ஆக இருந்த நிலையில் தற்போது இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆட்சியில் தனி நபர் கடன் 92 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த கடனுக்கு அரசு சார்பில் வட்டி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மொத்த வருவாய் வரவுகளில் வட்டி செலவீனத்தின் சதவீதம் 22.8 சதவீதமாக உள்ளது. ஆண்டுக்கு அரசு சார்பில் ரூ.67,000 கோடி வட்டி கட்டப்பட்டு வருகிறது என்ற விஷயங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

    Advertisement

    இந்நிலையில் தான் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரியாஸ் அஹமது தன் மீதான ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 934 கடனை அரசிற்கு திரும்ப செலுத்தி உள்ளார். இவர் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப துறையின் அமைச்சராக இருக்கும் குமாரை இன்று சந்தித்து ரூ.1.28 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

    மேலும் இதுதொடர்பான கடிதத்தையும் முதல்வர் விஜய்க்கு அனுப்பி வைத்தார். அதில், ''நம் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கை நேற்று (16.06.2026) வெளியிடப்பட்டதில், தனி நபர் மீதான கடன் ரூ.1,28,934 என்பதை நான் அறிந்தேன். இதில் எனது பங்களிப்பாக ரூ.1,28,934 அளிக்கின்றேன். எனவே என் பஙகளிப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.

    English Summary

    Tamil Nadu Debt: A white paper released yesterday revealed that the debt burden amounts to ₹1.28 lakh per person in Tamil Nadu. Following this, a lawyer named Riyas Ahmed met Minister Kumar today and handed over a cheque for the ₹1.28 lakh debt attributed to him.