லீமா ரோஸ் ரூ.500 கோடி முதலீடு? மொத்தமாக ஏமாந்த வேலுமணி? எடப்பாடியிடம் நெருங்குகிறார்களா 25 பேரும்?

  • சென்னை: தமிழக அரசியலில் லீமா ரோஸின் முதலீடு, எடப்பாடி பழனிசாமியின் இறுக்கமான நிர்வாகக் கட்டுப்பாடு மற்றும் வேலுமணியின் பக்கம் அணிதிரண்டுள்ள 25 எம்எல்ஏக்களின் அதிரடி நகர்வுகள் என காட்சிகள் வேகமாக மாறி வருகின்றன. அதிகாரத்தை நோக்கிய இந்த மும்முனைப் போட்டியில், சட்டச் சிக்கல்களும் கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனைகளும் தற்போது அக்கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளன. இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தந்துள்ள ஒரு பேட்டி, அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தாமோதரன் பிரகாஷின் சமீபத்திய பேட்டியில், "அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகத்தான் வேலுமணியின் தற்போதைய நிலை இருக்கிறது. விஜய்க்கு ஆதரவு தருகிறேன் என்று சொல்லி, இதற்காக எடப்பாடி பழனிசாமியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வேலுமணி.

    Advertisement

    லீமா ரோஸ் ரூ.300 கோடி

    லீமா ரோஸிடம் பெரிய தொகையைப் பெற்று, அதில் 300 கோடியை அரசியல் விளையாட்டுகளுக்காகப் பயன்படுத்தியதோடு, கட்சியையும் உடைக்க முயன்றார். ஆனால், கட்சியின் நிர்வாக அதிகாரம் இன்னும் முழுமையாக பொதுச்செயலாளரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால், வேலுமணியால் நினைத்ததைச் செய்ய முடியவில்லை. உண்மையில், என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாக விஜய் ஆரம்பத்தில் வேலுமணியிடம் உறுதி அளித்திருந்தாராம்.

    இப்போது வேலுமணி தரப்பில் 25 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற சூழல்களில் இவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. இவர்களைப் பற்றிய ஆதாரங்களுடன் கூடிய புகாரை சபாநாயகரிடமும் ஆளுநரிடமும் எடப்பாடி பழனிசாமி வழங்கிவிட்டார். கட்சித் தாவல் சட்டப்படி இவர்களின் பதவிகள் பறிபோகும் அபாயம் உள்ளது.

    Advertisement

    அதிமுக 25 எம்எல்ஏக்கள்

    இந்த எம்.எல்.ஏ.க்களை விஜய்யே நேரடியாகச் சந்தித்துப் பேசியது அவருக்குப் பெரிய சிக்கலாக மாறக்கூடும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வழக்கின் பாணியில், இந்த விவகாரம் சி.பி.ஐ. வசம் சென்றால் விஜய்க்கு பெரும் நெருக்கடி ஏற்படும். எடப்பாடி கொடுத்த புகாரின் அடிப்படையில், இவர்களை அமைச்சராக்க முடியாது என்று ஆளுநரே திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

    மற்ற அனைவரின் பதவிகளையும் பறித்த எடப்பாடியால், லீமா ரோஸின் பதவியை மட்டும் ஏன் பறிக்க முடியவில்லை என்றால், பத்து தொகுதிகளுக்கான தேர்தல் செலவுகளை அவரே ஏற்றுக்கொண்டதுதான். ஒருவேளை அதை மீறி செயல்பட்டால், அவரிடம் வாங்கிய 500 கோடியைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால், அந்த ஒரு இடத்தில் மட்டும் எடப்பாடி பின்வாங்கியதாக தெரிகிறது" என்றெல்லாம் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் தாமோதரன் பிரகாஷ்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    எனினும் மேற்கண்ட தகவல்கள் உண்மையா என்று தெரியவில்லை.. ஒருவேளை உண்மையானால், இது தமிழக அரசியலில் பெரும் சட்டப் போராட்டத்திற்கும், தார்மீகக் கேள்விகளுக்கும் கண்டிப்பாக வித்திடும்.

    கட்சித் தாவல் சட்டம் மற்றும் சி.பி.ஐ. விசாரணை போன்ற சட்ட ரீதியான தடைகள் ஒருபுறம் இருக்க, பணபலம் மற்றும் திரைத்துறை செல்வாக்கு அரசியலை எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதையும் இந்தச் சம்பவம் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது..

    குறிப்பாக, ஒரு கட்சியின் உட்கட்சி மோதல்கள் மற்றும் நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் எவ்வாறு ஆட்சியின் ஸ்திரத்தன்மையை அசைக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

    அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியின் காய் நகர்த்தல்கள், எதிராளிகளின் பலவீனங்களை உணர்ந்து அவர்களைப் பொருளாதார ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் முடக்குவதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது.

    Advertisement

    விஜய்யின் அரசியல் நுழைவு, இத்தகைய சிக்கலான வலைப்பின்னல்களுக்குள் சிக்காமல் தனது பயணத்தை எப்படித் தொடரப் போகிறது என்பது பெரும் கேள்விக்குறியே.. வேலுமணி & கோவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதையடுத்து அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை.. எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று 25 பேரும் யூடர்ன் போட்டு வரப்போகிறார்களா? என்பதும் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    Leema Rose ₹500 Crore Investment? Was Velumani Misled?.. Are 25 Members Moving Closer to Edappadi Palanisamy?