தவெகவுக்கு எதிராக.. போராட்டக்களத்தில் இறங்கும் இடதுசாரிகள்! பெரிய சிக்கலில் விஜய்!

  • சென்னை: பெரும்பான்மை பெற்றும் ஆட்சிக்கு வர முடியாமல் இருந்தபோது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தவெகவுக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு கொடுத்திருந்தன. இப்படி இருக்கையில், தற்போது ஆட்சிக்கு எதிராக 2 முக்கியமான போராட்டங்களை கையில் எடுத்திருக்கின்றன. இதனால் முதலமைச்சர் விஜய் கடும் அதிருப்தியடைந்திருக்கிறார்.

    Advertisement

    முதல் போராட்டம் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு எதிரானதாகும். ஏற்கெனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மக்களை திரட்டி போராட்டத்தை நடத்தியிருந்தது. அந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருந்தாலும் அனுமதியை மீறி போராட்டம் நடைபெற்றது. தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) இந்த போராட்டத்திற்கு ரெடியாகி வருகிறது.

    Advertisement

    முதல் போராட்டம்

    ஏற்கெனவே உள்ள சட்டமன்றத்திலும், தலைமை செயலகத்திலும் இடப்பற்றாக்குறை இருக்கிறது. எனவே, புதிய கட்டிடம் கட்டுவதன் மூலம் பிரச்சனை சரி செய்துவிடலாம் என்பதுதான் விஜய்யின் ஐடியா. எல்லாம் ஓகேதான்.. ஆனால், எந்த இடத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகம் கட்டுவது என்பதுதான் பிரச்சனையே! பட்டினப்பாக்கம் என்பது மீனவ மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதி. இந்த இடத்தில் தலைமை செயலகம் வந்தால்.. ஏராளமான அதிகாரிகள் மீன் விற்பனை செய்யும் இடங்களை தாண்டிதான் தலைமை செயலகத்திற்குள் போவார்கள்.

    மீனவர்கள் கொந்தளிப்பு

    அவர்கள் சும்மா போவார்களா? நாற்றமடிக்கிறது.. என்று மூக்கை மூடிக்கொண்டு போவார்கள். ஒரு நாள், ரெண்டு நாள் அட்ஜெஸ்ட் செய்துக்கொள்வார்கள்.. ஆனால் ஒவ்வொரு முறையும் எப்படி? எனவே.. மீனவர்களை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய உத்தரவு போடுவார்கள். காலங்காலமாக பட்டினப்பாக்கத்தில் மீன் விற்பனை செய்து வரும் மீனவர்கள், புதிய தலைமை செயலகத்திற்காக வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள். இந்த அச்சம்தான் பட்டினப்பாக்க பகுதி மக்களை.. புதிய தலைமை செயலகத்திற்கு எதிராக கொந்தளிக்க வைத்திருக்கிறது.

    Advertisement

    எனவே விரைவில் மீனவர்களை திரட்டி பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமை செயலகம் அமைவதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சிபிஎம் அறிவித்திருக்கிறது.

    இரண்டாவது போராட்டம்

    மறுபுறம், கல்வி நிதியை தவறாக பயன்படுத்துவதாக கூறி.. மலேசியாவில் பயின்று வரும் எனக்கு தமிழ்நாடு அரசு போதிய நிதியை வழங்கவில்லை என்று மாணவர் பாரதிதாசன் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விஷயத்தை இடதுசாரிகள் மாணவர் அமைப்பான 'இந்திய மாணவர் சங்கம்' (SFI) தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது. கல்வி நிதியை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று, இன்று மதியம் 2 மணியளவில் சென்னையில் இந்த அமைப்பு போராட்டத்தை நடத்த இருக்கிறது.

    Advertisement

    பாராதிதாசனுக்கு ஆதரவு

    இது குறித்து இந்த அமைப்பின் மாநில செயலாளர் சம்சீர் அகமது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் உயர்கல்வி பயின்று வரும் மாணவர் பாரதிதாசன் அவர்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை தொடர்பான பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரை உரிய தீர்வு காணப்படாதது வன்மையான கண்டனத்திற்குரியது.

    தமிழக அரசு நடவடிக்கை எடுக்கணும்

    தமிழக அரசின் உதவித்தொகையை நம்பியே வெளிநாட்டில் தனது உயர்கல்வியைத் தொடர்ந்து வரும் ஒரு மாணவர், தனது கல்வியைத் தொடர்வதற்கான நிதிக்காக தொடர்ந்து அரசிடம் முறையிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

    Advertisement

    மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதில் ஏன் இத்தனை காலதாமதம்?
    தகுதியான மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் வரை அரசு ஏன் காத்திருக்க வேண்டும்?

    அரசின் திட்டத்தின் மூலம் வெளிநாட்டில் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்ற மாணவர்களின் கல்விப் பயணத்தை, அதே அரசின் நிர்வாகத் தாமதம் தடுக்கக்கூடாது. பாரதிதாசன் அவர்களின் விவகாரத்தில் இனியும் காரணங்களைக் கூறி காலம் கடத்தாமல், அவருக்குச் சேர வேண்டிய உதவித்தொகையை உடனடியாக வழங்கி, அவரது கல்வியைத் தடையின்றி தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாரதிதாசன் மட்டும்தான் பிரச்சனையா?

    இது பாரதிதாசன் ஒருவரின் பிரச்சினை மட்டுமல்ல. அரசு வழங்கும் அயலக உயர்கல்வி உதவித்தொகையை நம்பி தங்களது எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான பிரச்சினையாகும்.

    Advertisement

    தமிழக அரசே! சமூக நீதித்துறையே!

    பாரதிதாசன் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்கு!

    அயலக உயர்கல்வி மாணவர்களை நிதிக்காக அலைக்கழிக்காதே!

    மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் வரை வேடிக்கை பார்க்காதே!

    அரசின் உத்தரவாதத்தின் அடிப்படையில் வெளிநாடு சென்ற மாணவர்களின் கல்விப் பொறுப்பைத் தட்டிக்கழிக்காதே!

    மாணவர்களின் உயர்கல்வியை பாதுகாத்திடு - அவர்களுக்குச் சேர வேண்டிய நிதியை உடனடியாக வழங்கிடு!

    பாரதிதாசன் அவர்களின் கல்வி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, அவருக்குச் சேர வேண்டிய உதவித்தொகையை வழங்க வேண்டும். இனியும் காலதாமதம் தொடர்ந்தால், மாணவர்களின் உரிமைக்காக இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக் குழு போராட்டத்தை தீவிரப்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இப்படி தவெக அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை இடதுசாரிகள் மேற்கொண்டிருப்பது, விஜய்க்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இந்த பிரச்சனைகளில் முதலமைச்சர் விஜய் நேரடியாக தலையிட்டு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

    Topics: #cpi #cpm #tvk #vijay

    English Summary

    TVK government: Left-wing parties had extended their support to TVK without any expectations when the party was unable to assume power despite securing a majority. However, they have now taken up two major protests against the government. Chief Minister Vijay is deeply displeased by this.