அம்மாவின் பென்ஷனுக்காக வாரிசு சான்றிதழ்.. ரூ.10 ஆயிரம் கேட்டாராம் சென்னை விஏஓ.. என்னாச்சு தெரியுமா?

  • சென்னை: வாரிசு சான்றிதழ் வாங்க சென்றிருக்கிறார் சங்கர்.. முதலில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்களாம்.. பிறகு ரூ.8 ஆயிரத்துக்கு பேரம் பேசினார்களாம்.. அப்பாவை இழந்த நிலையில், அம்மாவின் பென்ஷனுக்காக வாரிசு சான்றிதழ் கேட்டு சென்ற சங்கர் கடைசியில் என்ன செய்தார் தெரியுமா? அந்த விஏஓ இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.. அப்படி என்னதான் நடந்தது?

    Advertisement

    சென்னை ஆவடி காமராஜர் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர்.. 32 வயதாகிறது.. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய அப்பா முனுசாமி, இந்து சமய அறநிலையத்துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கடந்த மாதம் உடம்பு சரியில்லாமல் முனுசாமி இறந்து விட்டார்.

    Advertisement

    வாரிசுச் சான்றிதழ் அவசியம்

    இதையடுத்து, அவரது மனைவி வனம்மாள் பென்ஷன் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்காக வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டதால், கடந்த 23-ம் தேதி ஆவடி கோவில்பதாகை-2 கிராம நிர்வாக அலுவலகத்தில் வனம்மாளின் மகன் சங்கர் அப்ளை செய்தார்.

    அப்போது அங்கு கிராம நிர்வாக அலுவலராக இருந்த அரவிந்த் (34), வாரிசு சான்றிதழ் கொடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சங்கர் சம்மதிக்காத நிலையில், 2 பேருக்குமிடையே இடையே பேரம் நடந்துள்ளது. கடைசியில் ரூ.8 ஆயிரம் கொடுத்தால் வாரிசு சான்றிதழ் தருவதாக அரவிந்த் கறாராக சொல்லிவிட்டாராம்.

    Advertisement

    பேரம் பேசிய விஏஓ ஆபீஸ்

    ஆனால், லஞ்சம் கொடுத்து சான்றிதழ் வாங்க சங்கருக்கு துளியும் விருப்பமில்லை.. அதனால் அவர் நேராக திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீசார், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாரானார்கள்... ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சங்கரிடம் போலீசார் கொடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுக்கும்படி சொல்லி அனுப்பினார்கள்.. சங்கரும் அந்த ரூ.8 ஆயிரம் பணத்துடன் விஏஓ ஆபீசுக்கு சென்றிருக்கிறார்.

    அப்போது கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த் சொன்னபடி, அந்த ரூ.8 ஆயிரத்தை கிராம நிர்வாக உதவியாளர் ரவி (53) என்பவரிடம் சங்கர் கொடுத்தார். ரவி பணத்தை வாங்கிய அடுத்த நிமிடமே, அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர்.

    Advertisement

    திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் மாலா தலைமையிலான போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் ரவி ஆகிய 2 பேரையுமே போலீசார் கைது செய்து விட்டனர்.

    கணவனை இழந்த பெண்ணுக்கு பென்ஷன்

    வாரிசு சான்றிதழ் என்பது ஒரு சாதாரண சான்றிதழ் இல்லை.. ஒருவர் இறந்த பிறகு, அவருடைய குடும்பத்தில் யார் சட்டப்பூர்வ வாரிசுகள் என்பதை உறுதி செய்யும் முக்கியமான ஆவணமாகும்..

    முக்கியமாக கணவரை இழந்த ஒரு பெண்ணுக்கு, அவரது பென்ஷன் உள்ளிட்ட பணப் பலன்களை பெற இந்த சான்றிதழ் முக்கியமாகிறது.. இப்படிப்பட்ட சூழலில், கணவரை இழந்து நிற்கும் ஒரு பெண்ணுக்காக வாரிசு சான்றிதழ் வாங்கச் சென்ற மகனிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு, பிறகு ரூ.8 ஆயிரத்துக்கு பேரம் பேசியதாக கூறப்படுவதுதான் இந்த சம்பவத்தை இன்னும் வேதனையாக மாற்றுகிறது.

    Advertisement

    ஆட்சிக்கு வந்து, வெறும் 100 நாளில் லஞ்சம், ஊழலை ஒழிப்பதாக தவெக அரசு சொல்லியிருந்த நிலையில், அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வேதனையையும், கலக்கத்தையும் தந்து கொண்டிருக்கிறது...!!!

    English Summary

    Legal Heir Certificate Rs 10,000.. Chennai VAO Bribe Case.. What Happened Next?