சென்னையில் விஸ்கி, வோட்கா, ரம் flavour-ல் ஐஸ்கிரீம்களா? உணவு பாதுகாப்பு துறை ஆய்வால் பரபரப்பு

  • சென்னை: சென்னை அண்ணாநகரில் மதுபான சுவைகளில் ஐஸ்கிரீம்கள் தயாரித்து விற்பனை செய்வதாக இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் ஷேர் செய்த வீடியோக்களை அடிப்படையாக கொண்டு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்த மதுபான ஐஸ்கிரீம்களை சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

    Advertisement

    சென்னை திருமங்கலம் பகுதியில் ஐஸ்கிரீம் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் பல்வேறு ஐஸ்கிரீம்கள் உள்ளன.

    Advertisement

    ஐஸ்கிரீம் என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம். வழக்கமாக சாப்பிடும் ஃபிளேவர்கள் இல்லாமல் வித்தியாசமாக நிறைய வகைகளில் ஐஸ்கிரீம்கள் இருந்தால் தினமும் ஒரு ஃபிளேவரையாவது சாப்பிட்டு பார்த்து விட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும்.

    அந்த வகையில் திருமங்கலத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் ரெட் வைன், வோட்கா, விஸ்கி, ரம் ஆகியவற்றின் ஃபிளேவர்களில் ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுவதாக இன்ஸ்டாகிராமில் தகவல்கள் கிடைத்தன.

    அதாவது உணவு பிரியர்கள் கடைகளுக்கு சென்று ரிவ்யூ செய்து தங்களது சேனலில் இன்ஸ்டா வீடியோவாக போடுவது வழக்கம். அந்த வகையில்தான் பெண் ஒருவர் அந்த ஐஸ்கிரீம் கடையில் மதுபான ஃபிளேவர்களில் ஐஸ்கிரீம்கள் இருப்பதாக ரிவ்யூ சொன்னார்.

    Advertisement

    இதை பார்த்த மக்களுக்கு பகீர் என்றாகி போனது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம்களில் மதுபான சுவையா? என இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பார்ப்போரை அதிர வைத்தன.

    இந்த வீடியோ உணவு பாதுகாப்புத் துறையினருக்கும் சென்றது. அவர்கள் புகாரின் பேரில் இரு நாட்களுக்கு முன்பு இந்த ஐஸ்கிரீம் கடைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மதுபான சுவை கொண்ட ஐஸ்கிரீம்களின் மாதிரிகளை பறிமுதல் செய்தனர்.

    கைப்பற்றப்பட்ட ஐஸ்கிரீம் மாதிரிகள் அனைத்தும் தற்போது சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதுதான் இந்த ஐஸ்கிரீம்களில் உண்மையிலேயே மதுபானம் சேர்க்கப்பட்டிருக்கிறதா இல்லை சுவைக்காக (Flavour) எசன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவரும்.

    Advertisement

    அது போல் இன்ஸ்டா பிரபலங்கள், யூடியூபர்கள் இது போன்று விஷயங்களை வீடியோவாக எடுத்து போடுவதையும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதே வேளையில் அவர்கள் வீடியோவாக போட்டதால்தான் உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு இந்த விஷயம் தெரிந்துள்ளது என்றும் சிலர் நியாயப்படுத்துகிறார்கள்.

    English Summary

    Liquor flavoured ice creams sold in Chennai Annanagar Ice cream parlour which leads to seize them for testing by Food Safety Officers.