டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயரப்போகிறது.. தமிழகத்தில் பாட்டிலுக்கு எவ்வளவு அதிகமாகும்?

  • சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களில் விலை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனெனில் மதுபானங்களின் விலையை உயர்த்தும் வகையில் சட்டமன்றத்தில் புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுவது தடுத்த ஆன்லைன் சீர்திருத்தத்தை அறிவித்த மறுநாளே, இந்த திட்டத்தை தவெக அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. எவ்வளவு விலை உயர்த்தப்படும் என்பதை பார்ப்போம்.

    Advertisement

    தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகள் மூலம் தினந்தோறும் சுமார் 100 முதல் 120 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் 200 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. தமிழநாட்டில் மொத்தம் உள்ள கணக்கிட்டு இந்த வரி வருவாயை கணக்கிட்டால் சுமார் 34 சதவீதம் ஆண்கள் தினமும் மது அருந்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அப்படி மது அருந்தினால் மட்டுமே அரசுக்கு 56000 கோடி வருமானம் கிடைக்கும். உண்மையில் அரசுக்கு 50 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.

    Advertisement

    டாஸ்மாக் மற்றும் மனமகிழ்மன்றங்கள் மூலம் அரசுக்கு வருமானம் வந்தாலும், தொல்லையும் மிக அதிகமாகவே உள்ளது. பல ஏழை மக்கள் வறுமையில் தவிக்க, இளம் வயது விதவைகளாக இருக்கவும் மதுபானங்களே முக்கிய காரணம் ஆகும். மதுப்பழக்கத்தை கைவிட முடியாமல், அதற்கு அடிமையான பலர், குடித்துவிட்டு, அந்த சாலையில் ரகளையில் ஈடுபடுவதும் இயல்பான ஒன்றாக இருக்கிறது. இதனால் மதுக்கடைகள் உள்ள சாலையில் நடக்கவே மக்கள் சிரமப்படுகிறார்கள். இதனை உணர்ந்த அரசுகள் அவ்வப்போது சிக்கலான மதுக்கடைகளை மூடுகின்றன.

    அந்த வகையில் தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, பள்ளி வளாகம், பேருந்து நிலையம், வழிபாட்டு தளங்களுக்கு அருகில் உள்ள சுமார் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தது. அதன்படி கடைகளையும் கணிசமாக மூடியது. எனினும் எந்தந்த கடைகள் மூடப்பட்டது என்ற விவரம் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என தவெக அரசு வாக்குறுதி அளித்தது. அந்த வகையில் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை கேட்ட டாஸ்மாக் நிர்வாகம், ஊழியர்களுக்கு சுமார் 25% ஊதியத்தை அதிகரித்தது

    Advertisement

    அத்துடன பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் பதவி நீக்கப்படுவார்கள் என எச்சரித்தது. ஆனாலும் டாஸ்மாக்கில் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது நிற்கவில்லை.. இதனால் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதராக வாங்குவதை தடுக்கவும், பிடித்த மதுபானங்களை குடிமகன்கள் வாங்கவும் ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்தியோக இணையதளமும் தொடங்கப்பட்டது. இதன்படி ஆன்லைனில் ஆர்டர் செய்தவர்கள், நேரில் போய் ஸ்கேன் செய்து காட்டினால், அவர்கள் விரும்பும் மதுபானத்தை கூடுதல் விலை இல்லாமல் வாங்க முடியும்.

    இந்த திட்டம் ஒருபுறம் எனில், நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் மதிப்புக்கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்திருக்கிறது தவெக அரசு. இதன் படி, தமிழகத்தில் மதுபான பாட்டிலுக்கான விலையானது 20 ரூபாய் வரை உயர உள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் சமூக தீர்வை வரியாக விதிக்க அரசு முடிவு செய்திருககிறது. டாஸ்மாக்கில் விற்பனைக்கு பின், காலி பாட்டில்களை மறுசுழற்சி செய்வதில் பிரச்சனை ஏற்படுவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் இதைக் கட்டுப்படுத்த, புதிதாக வரி விதிக்க போகிறது. இந்த வரி விதிப்பால் பிராந்தி, விஸ்கி, பீர் என அனைத்து வகையான மதுபான பாட்டிலுக்கும் தலா 20 ரூபாய்க்கு மிகாமல் உயரும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன.

    English Summary

    Reports indicate that the prices of liquor at TASMAC outlets are likely to increase, as a new bill proposing a price hike has been tabled in the Legislative Assembly.