லாஜிக் உதைக்குதே.. திமுக, அதிமுக கூட்டு என்றால் அவர்களுடன் இருந்தவர்களை தவெகவில் ஏன் சேர்த்தீங்க?

  • சென்னை: திமுக, அதிமுகவும் கூட்டு சேர்ந்துவிட்டார்கள் என்று விஜய் மீண்டும் மீண்டும் பிரச்சாரத்தில் சொல்கிறார்.. ஆனால், திமுகவுடன் கூட்டணியில் இருந்த அத்தனை பேருடனும் கூட்டணி வைத்திருப்பது விஜய்தானே? பாஜக கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு, பாஜக தயவில் வெற்றி பெற்றவர்களை தன்னுடைய நண்பர்களாக வைத்திருப்பதும் விஜய்தானே? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே

    Advertisement

    சாணக்யா சேனலில் பேசியிருக்கும் ரங்கராஜ் பாண்டே, "இந்த இடைத்தேர்தலில் அதிமுகவை தாக்கியே விஜய் அதிகம் பேசுகிறார்.. காரணம், தாராபுரம் என்பது அதிமுகவின் கோட்டையாக உள்ளது.. வேட்பாளர் சத்யபாமா எங்கே சென்றாலும் எதிர்ப்புகளும் வருகின்றன...

    Advertisement

    தொகுதி மக்களிடம் "என்னை சட்டமன்றத்துக்கு அனுப்புங்கள்" என்று ஓட்டு கேட்கிறார் சத்யபாமா.. ஆனால், வாக்காளர்களோ, "நாங்கள்தான் உங்களை ஏற்கனவே சட்டமன்றத்துக்கு தானே அனுப்பி வைத்தோமே?" என்று திருப்பி கேட்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி அதிமுக

    சத்யபாமா அன்று போட்டியிட்டபோது, இதே தொகுதியில்தானே தவெகவும் அப்போது போட்டியிட்டது? ஆனாலும் விசில் சின்னம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டுதான், சத்யபாமாவை அம்மக்கள் வெற்றி பெற வைத்தார்கள்? இப்போது ராஜினாமா செய்துவிட்டு மீண்டும், அதே விசிலில் வந்து நின்றால் எப்படி?

    அதனால்தான் இங்கே விஜய் தன்னுடைய பிரச்சாரத்தை வேறு மாதிரி செய்கிறார்.. இது அதிமுகவின் கோட்டை என்று தெரிந்துதான், அங்கே ஓட்டையை போடப்பார்க்கிறார் விஜய். "இது எம்ஜிஆர் அதிமுகவும் இல்லை, ஜெயலலிதா அதிமுகவும் இல்லை, இப்போதுள்ள இரட்டை இலையை வைத்திருப்பது எடப்பாடியின் அதிமுக என்கிறார்..

    Advertisement

    திமுக, அதிமுக ஒன்றுசேர்கிறதா

    அதேபோல, திமுகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க பார்க்கிறது, திமுக, அதிமுக ஒன்றுசேர பார்க்கிறார்கள், கூட்டு சதி என்று அடுத்த விஷயத்தை சொல்கிறார் விஜய்..

    ஆனால், அன்று திருமாவளவனை முதலமைச்சராக்கிவிடலாம் என்று முடிவெடுத்தபோது, அதற்கு சிவி சண்முகம் சம்மதித்துள்ளார்.. இதை வேலுமணியும் வெளியில் ஒப்புக்கொண்டுள்ளார்.. திருமாவளவன் முதலமைச்சராகியிருந்தால் மட்டும் அதிமுக, திமுக ஒன்று சேராதா? 2 எம்எல்ஏக்களை வைத்து திருமா எப்படி முதல்வராகியிருக்க முடியும்? முதலில் திருமாவளவன் எம்எல்ஏவும் கிடையாதே?

    இன்று திமுக, அதிமுகவும் கூட்டு சேர்ந்துவிட்டார்கள் என்று விஜய் மீண்டும் மீண்டும் சொல்கிறார்.. ஆனால், திமுகவுடன் கூட்டணியில் இருந்த அத்தனை பேருடனும் விஜய் தான் கூட்டணி வைத்திருக்கிறார்..

    Advertisement

    பாஜக கொள்கை எதிரியா?

    அதேபோல, பாஜக கொள்கை எதிரி என்றுதானே விஜய் சொன்னார்.. அப்படியானால், எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், சிவி சண்முகம், இசக்கி சுப்பையா, மரகதம் குமாரவேல் இவர்கள் எல்லாருமே பாஜக தயவில் வெற்றி பெற்றவர்கள்தானே? அதிமுக-பாஜக கூட்டணியில்தானே வெற்றி பெற்றார்கள்? பாஜக கொள்கை எதிரி என்றுசொல்லிவிட்டு, பாஜகவுடன் கூட்டணியில் நின்று வென்றவர்கள் அனைவரும் இன்று உங்களுக்கு நண்பர்களா? லாஜிக்கே இல்லையே.

    எம்ஜிஆரின் அதிமுக இது இல்லை என்பதை தவெகவில் பெரிதாக்குகிறார்கள்.. அதேபோல எடப்பாடிக்கு கட்சிக்குள் உள்ள அதிருப்தியை ஊதி ஊதி பெரிதாக்கி, பொதுமக்கள் முன்னிலையில் அதை கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.. இது முழுக்க முழுக்க ஓட்டுக்கான ஆதாயம் தேடக்கூடிய அரசியலாகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Logic Question Vijay TVK.. If DMK-AIADMK Are Together, Why Did You Include Their Leaders?