”எப்படி இருந்த நேபாளம், இப்படி ஆகிட்டே” ஒரே நொடி காணாமல் போன வீடு, பாலங்கள்.. நெஞ்சே பதறுதே

  • காத்மண்ட்: திபெத் எல்லையில் பனிப்பாறையின் உடைப்பினால் ஏற்பட்ட பெருவெள்ளம் நேபாளத்தை புரட்டிப் போட்டுள்ளது. எப்படி இருந்த நேபாளம், இப்படி ஆகிட்டே என்று சொல்லத் தோன்றும் அளவுக்கு இந்த பெருவெள்ளம் மாற்றிப் போட்டுள்ளது. தமிழர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது மேலும் வேதனையளிக்கிறது.

    Advertisement

    இமயமலை அடிவாரத்தில் அமைந்து இருக்கும் நேபாளம் இயற்கை எழில் மிகுந்ததாகும். எங்கு பார்த்தாலும் மலை முகடுகளும் பச்சைப் பசேல் இயற்கை காட்சிகளும் என கண்களுக்கு விருந்தளிக்கும். அழகு என்றாலே ஆபத்து தானே என்பதை நிரூபிக்கும் வகையில் அங்கு அடிக்கடி இயற்கை பேரிடர்கள் நடந்துள்ளன.

    Advertisement

    கிராமத்தையே அடித்து சென்ற வெள்ளம்

    இன்று திடீரென நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் அந்த நாட்டையே அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. சீனா திபெத் - நேபாள எல்லைப்பகுதியான எல்லைப் பகுதியில் பனிப்பாறை உடைப்பின் காரணமாக திடீரென நேபாளத்தின் போட்டே கோசி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. நேபாளத்தின் நுவாகோட், தாடிங்க், ரசுவா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    அந்த ஆற்றின் கரையோரங்களில் உள்ள வீடுகள், குடியிருப்புகள் மற்றும் பாலங்களை அப்படியே அடித்து சென்றுள்ளது. பெரிய பெரிய பாலங்கள், வீடுகள் அப்படியே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஒரே நொடியில் வீடுகள், பாலங்கள் காணாமல் போகின. சில இடங்களில் ஒட்டு மொத்த கிராமத்தையே அப்படியே அடித்து சென்றுள்ளது. கற்கள், மணலோடு அடித்து செல்லப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுவரை 95 பேர் பலி

    நுவாகோட், தாடிங்க், ரசுவா மாவட்டங்களில் ஓடும் போட்டி கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நேபாளத்தின் இயற்கை அழகை ரசிக்க சென்ற சுற்றுலாப் பயணிகளும் சிக்கினர். இதில் தமிழகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மொத்தமாக இந்தியர்கள் 105 பேர் இந்த பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    ஒட்டுமொத்தமாக நேபாளத்தில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் இதுவரை 95 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலும் பலி எண்ணிக்கை உயருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் கூட செய்ய முடியாத அளவுக்கு இருப்பதாகவும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    எப்படி இருந்த நேபாளம்?

    இந்த நிலையில் எப்படி இருந்த நேபாளம் இப்படி ஆகிட்டே என்று சொல்லத் தோன்றும் அளவுக்கு இந்த பெருவெள்ளம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் புகைப்படங்கள், வீடியோக்கள் தெரியவருகிறது. சமூக வலைத்தளத்தில் நேபாளம் வெள்ளம் தொடர்பான வீடியோக்கள் வைரலாகி பரவி பார்க்கும் பலரின் நெஞ்சத்தையும் பதற வைக்கிறது. முன்பு நேபாளம் எப்படி இருந்தது, வெள்ளத்திற்கு பிறகு எப்படி மாறியுள்ளது என்பதை காட்டும் புகைப்படங்கள், வீடியோக்களும் பரவி வருகின்றன.

    English Summary

    A massive flood, triggered by a glacial burst along the Tibet border, has devastated Nepal. The scale of the destruction is so immense that it has completely transformed the country, leaving one to marvel at how drastically the situation has changed. It is all the more distressing to learn that over a thousand people, including Tamils, are stranded in the aftermath.