அடுத்து கைது தான்? செந்தில் பாலாஜி - அசோக் குமாருக்கு லுக்அவுட் நோட்டீஸ்.. இனி தப்பவே முடியாது

  • சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி குதிரை பேரம் பேசிய வழக்கில் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் வென்று தவெக தலைவர் விஜய் முதல்வராகி உள்ளார். மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பெரும்பான்மையை நிரூபித்தார்.

    Advertisement

    இந்நிலையில் தான் தவெக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் சிலர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தவெகவின் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்தில் இந்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்து.

    அதன்படி சட்டசபை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வநது அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதிதவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது. இதுதொடர்பார் அவர் சென்னை திருவல்லிக்கேணி போலீசில் அளித்த புகாரி்ல 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலில தான் பேரம் பேசியதாக தவெக எம்எல்ஏ இளையராஜா தனது புகாரில் கூறியுள்ளார்.

    Advertisement

    இதில் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அவரது தம்பி அசோக் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தலைமைறைவாகி உள்ளது. அதோடு கைதுக்கு பயந்து உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார். இந்த வழக்கில் கைது நடவடிக்கை தொடங்கியதுமே செந்தில் பாலாஜி , அசோக் குமார் ஆகியோர் பொதுவெளியில் தென்படவில்லை. இருவரும் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தான் இருவருக்கும் எதிராக சென்னை திருவல்லிக்கேணி போலீசார் 'லுக்அவுட்' நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதன்மூலம் இருவரும் இனி வெளிநாடு தப்பித்து செல்ல முடியாது. ஒருவேளை வெளிநாடு தப்பித்து செல்வதற்காக விமான நிலையங்கள் சென்றால் 'லுக்அவுட்' நோட்டீஸ் அடிப்படையில் கைது செய்யப்படுவார்கள். இது செந்தில் பாலாஜி, தம்பி அசோக் குமாருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்துகிறது.

    Advertisement

    அதுமட்டுமின்றி இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று இன்று காலையில் தான் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் குமாருக்கு போலீசார் சம்மன் வழங்கினர். இருவரின் சொந்த கிராமமான கரூர் மாவட்டம் ராமேஸ்வர பட்டி கிராமத்துக்கு சென்ற திருவல்லிக்கேணி போலீசார் அவர்களின் பெற்றோரிடம் சம்மன் வழங்கினர். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் சம்மன் அனுப்பினர்.

    இன்று காலையில் முதலில் சம்மன் வழங்கிய போலீசார் அடுத்தததாக தற்போது 'லுக்அவுட்' நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதனால் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமாருக்கு நெருக்கடி முற்றி உள்ளது. அதுமட்டுமின்றி இருவரையும் கைது செய்யவே போலீசார் இப்படி அடுத்தடுத்து பிடியை இறுக்குகின்றனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English Summary

    A lookout notice has been issued against former DMK Minister Senthil Balaji and his brother Ashok Kumar in connection with a case involving an alleged ₹35 crore 'horse-trading' bid directed at Ilaiyaraja, the TVK MLA for the Uthangarai constituency in Krishnagiri district.