வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 நாட்களுக்கு சென்னையில் மழை விடாது! டெல்டா வெதர்மேன்

  • சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த நான்கு நாட்களுக்கு சென்னை முதல் நெல்லை வரை தமிழகம் முழுக்க 25 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நெல்லை என 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழைக்கு முன்னதாக தரைக்காற்று வீசும் எனவும், மழையின் போது வலுவான இடி, மின்னல் இருக்கக் கூடும். பொதுமக்களும், விவசாயிகளும் இடி,மின்னலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement


    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. வழக்கத்திற்கு மாறாக வெயில் தான் வாட்டி வதைக்கிறது. சென்னை முதல் குமரி வரை கொளுத்திய வெயிலால் இது என்ன கோடைக்காலமா என்று சொல்லும் அளவுக்கு விட்டு விளாசியது. இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    மேலும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்து இருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 21, 22 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரனும், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    25 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

    மத்திய கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. காற்றழுத்தாழ்வு பகுதியால் ஏற்படும் சாதகமான காற்று குவிதலால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பச்சலன மழை தீவிரமடையும். கடந்த 2 மணி நேரத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆங்காங்கே இடி,மின்னலுடன் கூடிய மழை பதிவாகி வருகிறது.

    வரக்கூடிய மணி நேரத்தில் வடமாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் மழை பரவலாகும். இன்று (19.09.2026) முதல் (22.09.2025) வரை அடுத்த 4 நாட்களில் குறிப்பாக மாலை/இரவு/நள்ளிரவு நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, அரியலூர், பெரம்பலூட், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் மாவட்டத்தில் பரவலாக மிதமானது முதல் சற்றே கனமழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பதிவாக கூடும்.

    Advertisement

    வலுவான இடி, மின்னலுடன்

    மேற்கு & கொங்கு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மழைக்கு முன்னதாக தரைக்காற்று வீசும், மழையின் போது வலுவான இடி,மின்னல் இருக்க கூடும். பொதுமக்களும், விவசாயிகளும் இடி,மின்னலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொடர்ந்து ஒதுக்கி வரும் தெற்கு டெல்டா, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் கோயம்புத்தூர் காற்றுப்பகுதியிலும் செப் 20,21 தேதிகளில் மழைக்கு சாதக நிலை காணப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

    English Summary

    Low pressure area forms: Delta Weatherman Hemachandran has announced the formation of a new low-pressure area in the Bay of Bengal. He stated that, as a result, heavy rains accompanied by thunder and lightning are likely across 25 districts of Tamil Nadu—stretching from Chennai to Nellai—over the next four days.