Low pressure area: அரபிக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. அதிகனமழை வெளுக்கும்.. ஐஎம்டி அலர்ட்

  • சென்னை: தமிழகத்தில் மழை விட்டு விளாசி வரும் நிலையில், வரும் நாட்களில் அதி கனமழைக்கு கூட வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதாவது வரும் 19 ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் பருவமழை மேலும் தீவிரமடையும் எனவும், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் 2 நாட்களுக்கு முன்பு கணித்து இருந்தது. ஆனால் எந்த தேதி என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிடவில்லை.

    Advertisement

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

    இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது 19 ஆம் தேதி திங்கட்கிழமை தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இதனால் தமிழகத்தில் பருவமழை மேலும் வலுப்பெறும் எனவும் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

    அதி கனமழை பெய்யக்கூடும்

    தமிழகத்தில் வடகிழக்கு பருமழை தொடங்கி நல்ல மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் தொடர்ந்து மேலும் மழை பெய்யும். தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வரும் 19 ஆம் தேதி திங்கட்கிழமை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

    Advertisement
    Low pressure areas: உருவாகிறது இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. இம்மாத இறுதியில் சம்பவம் தான்.. வெளுக்கப் போகுது மழை!

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் மேலும் பருவமழை தீவிரமடையும். குறிப்பாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவமழை மேலும் தீவிரமடையும். அதாவது வரும் 19 ஆம் தேதிக்கு பிறகு கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும்.. என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் விட்டு விளாசிய கனமழை

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன் தினம் தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஒரே நாளில் 15 செமீ-க்கும் அதிக மழை பெய்து வருகிறது. இன்றும் கூட சென்னையில் பல இடங்களில் மழை விட்டு விளாசியது. குறிப்பாக சென்னை பாரீசில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 17 செமீ மழை பெய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. வடசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை விட்டு விளாசியுள்ளது. இதனால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

    Advertisement
    Low Pressure Area: வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை தான் டார்கெட்.. மழை வெளுக்க போகுது!

    நாளையும் சென்னையில் மழை கொட்டும்

    நாளை பகல் நேரங்களில் வெளிச்சத்துடன் வெயில் அடிக்கலாம் எனவும், நாளையும் இதே போன்று மாலை, இரவு நேரங்களில் இதே போன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்தது. திருவாரூர், நாகை, தஞ்சை, நெல்லை, தென்காசி, குமரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை கொட்டியது. நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் கனமழை விட்டு விளாசியது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

    English Summary

    Low pressure area: As rain continues to lash Tamil Nadu, the Meteorological Department has indicated the possibility of extremely heavy rainfall in the coming days. A new low-pressure area is expected to form over the southwest Bay of Bengal on the 19th, which will further intensify the monsoon rains. The Meteorological Department has specifically warned that areas adjacent to the Western Ghats could experience heavy to extremely heavy rainfall.