Loyola Mani: லயோலா மணி நடத்திய ஒரே ஆய்வில் இத்தனை ஷாக்கா.. காட்பாடி பாடநூல் குடோவுன் சென்றபோது நடந்ததை பாருங்க

  • சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் குடோனில் தமிழ்நாட்டின் பாடநூல் கழக தலைவர் லயோலா மணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அவருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. ஒரே ஆய்வில் இத்தனை ஷாக்கா? என்பது போல டியூப் லைட், சுவிட்ஸ் போர்டு, புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்தது என அங்கிருந்ததை பார்த்து லயோலா மணி கடும் அதிர்ச்சியடைந்தார்.

    Advertisement

    தமிழ்நாட்டின் பாடநூல் கழக தலைவராக தவெக நிர்வாகி லயோலா மணி கடந்த மாதம் நியமனம் செய்யட்டார். கடந்த திமுக ஆட்சியில் பட்டிமன்ற பேச்சாளரும் திமுக நிர்வாகியுமான திண்டுக்கல் லியோனி இந்த பொறுப்பில் இருந்தார். ஆட்சி மாறிய நிலையில், பாடநூல் கழக தலைவர் பதவிக்கு லயோலா மணியை தவெக அரசு நியமனம் செய்தது.

    Advertisement

    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

    தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிறகு, லயோலா மணி, பாடநூல் கழகத்தின் குடோன்கள், அலுவலகங்களில் அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் குடோனில் ஆய்வு மேற்கொண்டார். ஆனால் இந்த ஆய்வின் போது லயோலா மணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

    உள்ளே நுழையும்போதே வாசலில் பெரிய கான்கிரிட் கல் ஒன்று கிடந்தது. இதை கவனித்த லயோலா மணி, இப்படி போட்டு வச்சிரூக்கீங்களே யாராவது தவறி விழுந்தால் என்ன செய்வது என்று அங்கு இருந்த அதிகாரிகளை கடிந்து கொண்டு உள்ளே எண்ட்ரி கொடுத்தார். உள்ளே நுழைந்ததும் அங்கு இருந்த டியூப் லைட் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்தது. இதனை பார்த்த லயோலா மணி, எல்லாமே பேட்ச் வொர்க்கா என்ற ரீதியில் ஒரு லுக் விட்டார்.

    Advertisement

    ஒரு டியூப் லைட் லூசாக இருந்தால் பராவயில்லை

    உடனே, தனது போனை எடுத்து வயரிங்கில் ஏகப்பட்ட பிரச்சினை இருப்பதாக அதிகாரி ஒருவருக்கு கால் செய்து பேசினார்.. அதிகாரியின் பதிலால் கொஞ்சம் சூடான லயோலா மணி, "கடைசியாக எப்போது இங்கே விசிட் செய்தீர்கள்.. என் தலையில் விழுவது போலக்கூட இங்கே ஒரு டியூப் லைட் தொங்குகிறது. நான் வேண்டும் என்றால் வீடியோ காலில் உங்களுக்கு காட்டவா?

    ஒரு டியூப் லைட் லூசாக இருந்தால் பராவயில்லை.. எல்லா டியூப் லைட்டுமே அப்படித்தான் இருக்கிறது. நாளைக்கு ஆட்களை அனுப்பி கொஞ்சம் பாருங்க.. கொஞ்சம் சீக்கிரமாக பண்ணுங்க.. உங்களிடம் வாக்குவாதம் எதுவும் பண்ணல.. உடனே சரி பண்ணி கொடுங்க" என்றார்.

    Advertisement

    இன்னொரு பக்கம் சுவிட்ச் போர்டு

    அதற்குள் இன்னொரு பக்கம், ஸ்விட்ச் போர்டு ஒன்று கழந்து கிடந்ததை பார்த்தார். அதனை பார்த்து அங்கு இருந்த பெண் ஊழியர் ஒருவரிடம், ஏன் இப்படி கிடக்கிறது என்று கேட்டார். அதற்கு அந்த பெண் ஊழியர் இங்கே புக் வைக்க மாட்டோம் என்று கூறவே, கொஞ்சம் கடுப்பான லயோலா மணி, ஏன் இப்படி மோசமாக கிடக்கிறது என்று கேட்டால் புக் வைக்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள் என்று கடிந்து கொண்டார்.

    ஒழுங்கற்ற முறையில் புத்தகங்கள்

    ஒரு லெட்டர் எழுதி கொடுத்ததும் உங்க வேலை முடிந்தது என்று நினைக்காதீர்கள்.. அதை தொடர்ந்து பாலோ பண்ணுங்க.. திடீர்னு அமைச்சர் ஆய்வுக்கு வந்தால் என்ன பண்ணுவீங்க.. உங்களை கேக்க மாட்டார்கள். என்னைத்தான் கேள்வி கேட்பார்கள் என்று உள்ளே போனார்.

    Advertisement

    அங்கே குடோன்களில் புத்தகங்கள் ஒழுங்கற்ற முறையில் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அது குறித்தும் கேள்வி எழுப்பினார். எலக்ட்ரிக்கல் பிரச்சினைகளை உடனடியாக சீர் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய லயோலா மணி அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    English Summary

    Loyola Mani, Chairman of the Tamil Nadu Textbook Corporation, conducted a surprise inspection of the Corporation's warehouse in Katpadi, Vellore district. He encountered a series of shocking discoveries during the visit. He was deeply dismayed by the state of affairs—ranging from the condition of the tube lights and switchboards to the way the books were stacked—leaving him stunned by the sheer number of issues found in a single inspection.