சென்னை: சிலிண்டர் விற்பனையில் முறைகேடுகளைத் தடுக்கவும், மானியம் சரியான நபர்களுக்கு தான் செல்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும் இகேஒய்சி அப்டேட் செய்வது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இதுவரை இகேஒய்சி அப்டேட் செய்யாதவர்கள் உடனே செய்துவிடவும். கேஸ் ஏஜென்சிக்குச் செல்ல முடியாதவர்கள், மின்னணு இகேஒய்சி மூலமாக வீட்டில் இருந்தபடியே தங்களது மொபைலில் சில நிமிடங்களில் அப்டேட் செய்துவிட முடியும்.
இந்தியாவில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. பாரத், இண்டேன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியமும் மத்திய அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
சிலிண்டர் விற்பனையில் முறைகேடுகளைத் தடுக்கவும், மானியம் சரியான நபர்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்தவும் இகேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒருவர் பெயரில் பல்வேறு இணைப்புகள், இறந்தவர்கள் பெயரில் உள்ள கேஸ் இணைப்புகள் உள்ளிட்டவைகளை கண்டறிவதற்காக இந்த பணிகள் நடைபெறுகின்றன. மாதம் ஒன்றுக்கு 25 லட்சத்துக்கும் அதிகமான வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பணியை மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் முடுக்கி விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹோட்டல்களுக்கு விற்கப்படும் 19 கிலோ வணிக சிலிண்டர்களின் விலை வீட்டு உபயோக சிலிண்டரை விட கூடுதல் விலையாகும். இதனால், பலரும் வீட்டு உபயோக சிலிண்டர்களை கள்ளசந்தையில் ஹோட்டல்களுக்கு விற்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கத்திலும் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு 'இ-கே.ஒய்.சி.' அடிப்படையில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு கடந்த 16 ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. பின்னர் வாடிக்கையாளர்கள் கோரிக்கையை ஏற்று 23 ஆம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், காலக்கெடுவை மேலும் ஒருவார காலத்திற்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதாவது வரும் 31 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது. எனவே, இகேஒய்சி முடிக்காதவர்கள் அப்டேட் செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. e-KYC செய்யாதவர்கள், மானிய விலையில் சிலிண்டர் வாங்குவதில் சிக்கல் ஏற்படலாம். அதேபோல், சரிபார்ப்பு இல்லாத வாடிக்கையாளர்களின் புதிய சிலிண்டர் புக்கிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கேஸ் ஏஜென்சி நிறுவனங்களே இகேஒய்சி செய்து வருகின்றன. சாமானிய மக்கள் அங்கு சென்று எளிதாக இகேஒய்சி செய்ய முடியும். அதேநேரம் கேஸ் ஏஜென்சிக்குச் செல்ல முடியாதவர்கள், மின்னணு இகேஒய்சி மூலமாக வீட்டில் இருந்தபடியே தங்களது மொபைலில் சில நிமிடங்களில் செய்துவிட முடியும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்தினால், இந்தியன் ஆயில் ஒன் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்ய வேண்டும். பாரத் கேஸ் வைத்து இருந்தால், ஹல்லோ பிபிசிஎல் செயைலியிலும் ஹெச்பி சிலிண்டர் என்றால், ஹெச்.பி.பே செயலியிலும் டவுனோடு செய்யலாம். அந்த செயலிகளில் மொபைல் எண்ணை கொடுத்து ஒடிபி உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பிறகு, 'e-KYC Update' என்ற ஆப்ஷனன் டிஸ்பிளே ஆகும். அதைக் கிளிக் செய்து கேட்கும் விவரங்களை கொடுக்க வேண்டும்.சிலிண்டர் விற்பனை முறைகேடு
காலக்கெடு 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு
வீட்டில் இருந்தும் அப்டேட் செய்யலாம்