எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?

  • சென்னை: எல்பிஜி சிலிண்டர் வச்சிருக்கீங்களா? ஜூன் 1 முதல் உங்க சமையல் அறைக்கு பெரிய மாற்றங்கள் வரப்போகின்றன. மத்திய அரசு இயற்கை எரிவாயு (PNG) பயன்பாட்டை தீவிரமாக ஊக்குவிக்கும் விதமாக பல அதிரடி விதிகளை அமல்படுத்த தயாராகி வருகிறது. தேசிய பிஎன்ஜி இயக்கம் 2.0 (National PNG Drive 2.0) ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், சிலிண்டர் பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன.

    Advertisement

    இந்த புதிய விதிகள் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    ஒரு வீட்டுக்கு ஒரு கனெக்ஷன் மட்டுமே!

    அரசின் முக்கிய முடிவு "One Household, One Connection" என்ற கொள்கை. உங்கள் பகுதியில் PNG குழாய் வசதி இருந்தால், PNG கனெக்ஷன் எடுத்தவுடன் உங்கள் பழைய எல்பிஜி சிலிண்டர் கனெக்ஷனை கட்டாயம் ஒப்படைக்க வேண்டும். ஒரே முகவரியில் இரு வகையான கேஸ் கனெக்ஷன்களை வைத்திருப்பது இனி சட்டப்படி அனுமதிக்கப்படாது.

    எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) தங்களது கணினி தரவுத்தளத்தை ஒருங்கிணைத்து, இரட்டை கனெக்ஷன் உள்ளவர்களை கண்டறியும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. PNG கனெக்ஷன் எடுத்தும் சிலிண்டரை ஒப்படைக்காதவர்களுக்கு சிலிண்டர் சப்ளை தற்காலிகமாக நிறுத்தப்படலாம் அல்லது தானாக ரத்து செய்யப்படலாம்.

    Advertisement

    இருப்பினும், நிரந்தரமாக கனெக்ஷனை ரத்து செய்ய பயமானவர்களுக்கு நல்ல செய்தி உள்ளது. 'Pause' வசதி மூலம் தற்காலிகமாக சிலிண்டர் கனெக்ஷனை நிறுத்தி வைக்கலாம். இதற்காக வழங்கப்படும் 'எல்பிஜி கனெக்ஷன் டிரான்ஸ்ஃபர் வவுச்சர்' மூலம் எதிர்காலத்தில் வேறு ஊருக்கு மாறினால் மீண்டும் சிலிண்டர் கனெக்ஷனை எளிதாக செயல்படுத்திக்கொள்ளலாம்.

    சிலிண்டர் ரீஃபில் மீது தடை

    PNG பைப்லைன் ஆக்டிவாக உள்ள வீடுகளுக்கு புதிய சிலிண்டர் புக் செய்யவோ, ரீஃபில் செய்யவோ முடியாது. கேஸ் விநியோக நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் கணினி நெட்வொர்க் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் புகிங் முயற்சிகள் தானாகவே தடுக்கப்படும். கருப்பு சந்தையில் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதையும், தவறான பயன்பாட்டையும் தடுப்பதே இதன் நோக்கம்.
    புக் செய்யும் இடைவெளி அதிகரிப்பு

    Advertisement

    சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க அடுத்த சிலிண்டர் புக் செய்யும் கால அவகாசம் (Lock-in Period) அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நகர்ப்புற மக்கள்: ஒரு சிலிண்டர் வாங்கிய பின் அடுத்ததுக்கு குறைந்தபட்சம் 25 நாட்கள் (முன்பு 21 நாட்கள்) காத்திருக்க வேண்டும்.

    கிராமப்புற மக்கள்: அதிகபட்சம் 45 நாட்கள் வரை காத்திருக்க நேரிடும்.

    ஆனாலும், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 மானிய விலை சிலிண்டர்கள் என்ற உரிமை தொடரும். அதற்கு மேல் தேவைப்பட்டால் முழு சந்தை விலையில் வாங்க வேண்டும். புதிய எல்பிஜி கனெக்ஷன் எடுப்பவர்களுக்கு டெபாசிட் மற்றும் இன்ஸ்டலேஷன் கட்டணம் சற்று உயர்த்தப்பட்டுள்ளது.

    Advertisement

    PNG திட்டம் வெற்றியடைந்ததா?

    மத்திய அரசு இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முக்கிய காரணம் உள்ளது. கடந்த மார்ச் வரை 6.5 லட்சம் புதிய PNG கனெக்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பலர் இன்னும் சிலிண்டரையே நம்பியுள்ளனர். PNG பயன்பாடு எதிர்பார்த்த அளவை விட 18 சதவீதம் குறைவாக உள்ளது.

    கடந்த பத்து ஆண்டுகளில் எல்பிஜி பயனர்கள் 33.5 கோடியாக இரு மடங்கு உயர்ந்துள்ளனர். ஆனால் PNG பயனர்கள் வெறும் 1.64 கோடி பேர்தான். இந்த இடைவெளியை குறைத்து, பாதுகாப்பான மற்றும் சுத்தமான PNG-க்கு மக்களை மாற்றுவதே அரசின் இலக்கு. இதனால் ஜூன் இறுதியில் PNG Drive 2.0-ஐ வெற்றிகரமாக முடிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    Advertisement

    நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் இப்போதே தங்கள் பகுதியில் PNG வசதி உள்ளதா என சரிபார்த்து, தேவையான நடவடிக்கைகளை எடுப்பது நல்லது. புதிய விதிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிவாயு இறக்குமதியை குறைக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளன.

    English Summary

    LPG Cylinder Users Alert: New Rules from June 1 - One Household One Connection Mandator